Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 54காலம் பொல்லாதது. காசு நிலையற்றது

கணபதிக்கு ஏராளமான விளைநிலங்கள்இருந்தன. ஆனால், மனுஷன் கருமி. இரவு பகலாக அரும்பாடுபடும் வேலைக்காரர்களுக்கு கூலி குறைவு. அதையும் மனதார கொடுக்கமாட்டார்.
இவரிடம் கந்தசாமி என்ற வண்டிக்காரன் வேலை பார்த்தான். அவன் மனைவி வள்ளி கஞ்சி வார்த்து கொடுப்பாள்.
ஒருநாள் அவசரப்பணி. கணபதி வில்வண்டியில் அமர, கந்தசாமி வண்டியை ஓட்டினான். திரும்ப வரும்போது, பயங்கர மழை பிடிக்கவே, கந்தசாமி வீட்டு முன்னால் கிடந்த சகதியில் வண்டி சிக்கிக்கொண்டது.
""ஐயா! மழை வெறித்தால் தான் வண்டியை நகர்த்த முடியும். அதுவரை என் குடிசையில் அமருங்கள்,'' என்றான் கந்தசாமி.
வேண்டாவெறுப்பாக உள்ளே போனார் கணபதி. கந்தசாமியின் மனைவி வள்ளி அவர் பசியாய் இருக்கிறார் என்பதை அறிந்து, ""ஐயா! எங்கள் வீட்டில் கஞ்சி இருக்கிறது. சாப்பிடுங்கள். வீடு போக இன்னும் ஒருமணி நேரம் ஆகும். அதுவும் மழை வெறித்தால் தான் ஆயிற்று,'' என்று டம்ளரை அவர் முன் நீட்டினாள்.
கணபதி கொதித்துவிட்டார்.
""ஒரு வேலைக்காரன் வீட்டுக்கஞ்சியை குடிக்க நான் கூலிக்காரனா! மரியாதையாக போய் விடு'' என கத்தினார். அவள் நடுங்கியபடியே போய்விட்டாள்.
ஆண்டுகள் பல கழிந்தது. கணபதியின் நிலம், வீடு அவரது தம்பிகள் போட்ட வழக்கில் கையில் இருந்து போக, ஒரே நாளில் ஓட்டாண்டியாகி விட்டார். கணபதி வீட்டார் பசியில் துடித்தனர்.
அவர் கந்தசாமியிடம் புலம்பினார். ""ஒரு காலத்தில், உன் மனைவி கொடுத்த கஞ்சியை அவமதித்ததன் விளைவு இது. என்னை மன்னித்துக்கொள்,'' என்றார்.
நடுத்தெருவில் நின்ற அவரது குடும்பத்தை, கந்தசாமி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அன்றும் அதே கஞ்சி தான். வள்ளியின் முகத்தைப் பார்க்க கணபதி வெட்கப்பட்டார்.
""ஐயா! மனுஷனை சூழ்நிலை தான் பேசவைக்கிறது. அன்று அப்படி! இன்று இப்படி!'' என்று டம்ளரை நீட்டினாள். அந்த குடும்பத்தார் பசி தாளாமல் கஞ்சியைக் குடித்தனர்.
காலம் பொல்லாதது. காசு நிலையற்றது, புரிகிறதா!

No comments:

Post a Comment