Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 70வீடு திருந்தினால் நாடே திருந்திவிடும்.

ஒரு குப்பத்தில் வசித்த மீனவர்கள் இரவில் கடலுக்குச் சென்று விட்டு காலையில் மீனுடன் திரும்புவார்கள். கடற்கரையிலேயே விற்றது போக, மீதி மீன்களை தங்கள் மனைவியரிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் சாப்பாட்டுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு, மீதியை கருவாடாக்கி விடுவார்கள். அதை பக்கத்து கிராமங்களில் விற்கச் செல்வார்கள்.
ஒருநாள், விற்பனைக்குச் சென்று திரும்பும்போது மழை பிடித்துக் கொண்டது. கூடைகளில் விற்றது போக மீதி கருவாடு இருந்ததால், அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்கள் வரும் வழியில் இருந்த பூக்காரியின் வீட்டில் கூடைகளை வைக்க இடம் கேட்டனர். இரக்க குணமுள்ள அவள், ""கூடைகளை மட்டுமல்ல, நீங்களும் உள்ளே வந்து அமருங்கள்.
இரவுப்பொழுதாகி விட்டது. இனி, இந்தப் பெருமழையில் நனைந்துகொண்டு போக வேண்டாம். இங்கு தங்கி விட்டு காலையில் செல்லலாம்,'' எனஅந்தப் பெண்கள் தங்க இடம் கொடுத்தாள்.
அவர்கள் அங்கு தங்கினர். அங்கு வீசிய பூ வாடை அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, தங்கள் கருவாட்டுக் கூடைகளை தலைமாட்டில் வைத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கினர்.
இதைத்தான் பழக்கதோஷம் என்பது. நாம், இளமையில் எந்தப் பண்பை வளர்த்துக் கொள்கிறோமோ, அது நம்மிடம் எளிதில் ஒட்டிக் கொள்கிறது. எனவே, நம் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை இளமையிலேயே கற்றுக் கொடுப்போம். காலையில் படிப்புடன் பக்திப் பாடல்கள் பாடவும், ஸ்லோகங்கள் சொல்லவும் பழக்குவோம். நல்லவனாக வாழ்ந்து காட்டி அவர்களையும் நல்லவர்களாக வளர்க்க முயற்சி எடுப்போம். வீடு திருந்தினால் நாடே திருந்திவிடும்.

No comments:

Post a Comment