Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 74ராமாயணத்தில் பலரும் அறிந்திராத கதை

ராமாயணத்தில் பலரும் அறிந்திராத கதை ஒன்றைக் கேட்போமா!
ராவணனின் நடவடிக்கை பிடிக்காமல் ராமரிடம் சென்று அடைக்கலமடைந்தான் விபீஷணன்.
போர் மூள இருந்த வேளையில், ஒருமுறை விபீஷணன் ராமனின் அனுமதி பெற்று தன் சின்ன அண்ணன்
கும்பகர்ணனைப் பார்த்து வருவதாகக் கூறினான். கும்பகர்ணனையும் ராமனின் பக்கம் சேர்க்க வேண்டும் என்பது விபீஷணனின் திட்டம். கும்பகர்ணன் விபீஷணனை மார்புறத் தழுவி வரவேற்றான்.
""தம்பி! நீ ஸ்ரீராமரிடம் சென்று அடைக்கலமடைந்ததை அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீ ஒருவனாவது இந்த அரக்க குலத்தில் தப்பி பிழைப்பாய் என்பதே மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால், நீ இங்கு வந்தது தெரிந்தால் பெரியண்ணா ராவணன் சும்மா இருப்பானா? உன்னைக் கொன்று விடுவானே! என் மகிழ்ச்சி போய்விடுமே! நீ ராமரிடம் சரண் அடைந்ததால், நமது மரபு பாதுகாக்கப்பட்டு விட்டது. நம் தந்தை புலஸ்தியரின் வாரிசுகள் எல்லாருமே அழிவோம் என்று நிலைமை இருந்தது. அதை நீ மாற்றி விட்டாய். ராம லட்சுமணர் போரில் உன்னை உறுதியாகக் காப்பாற்றுவார்கள்.
தம்பி! ராமபிரானால் என்றும் அழியாத "சிரஞ்சீவி' என்னும் பட்டம் பெற்றாய். ஆம்..ராமனின் புகழ் பேசப்படும் நாள் வரை உன் புகழும் நிலைத்திருக்கும். நீ வாழ்க,'' என வாழ்த்தினான். போர்க்களத்தில் அவன் மடிய இருந்த வேளையில், ராமனிடம்,""ராமா! என் தம்பி உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளான். ராவணனின் கையால் இவனுக்கு அழிவு நேரலாம். அந்த நேரத்தில் நீயோ, லட்சுமணனோ, அனுமானோ இவனைக் காக்க வேண்டும்,'' என வேண்டிக்கொண்டான்

No comments:

Post a Comment