Monday, June 20, 2011

குரு வழிபாடு

குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும், அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும். மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும். மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத்தடையை நீக்குவதில்

குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம் வணங்குவது நல்லது. புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது.

குரு வழிபாடு; பரிகாரம்:

 குரு பகவானுக்குரிய பொதுவான பரிகாரங்கள் மற்றும் அவர் அருளை அள்ளித்தரும் வழிபாடுகள் வருமாறு:

 * நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை செய்யலாம்.

* வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.

 * வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு செய்யலாம்.

 * வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.

* அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை வணங்கி ஆசிபெறலாம். குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.

 * விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.

 * அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 தடவை சுற்றி வலம் வரலாம்.

No comments:

Post a Comment