Tuesday, July 26, 2011

7 வகை தீட்சை!

மனிதர்கள் பலவகைப்பட்ட தகுதிகளை உடையவர்கள். ஆகையால் அவரவர் தகுதிக்கு ஏற்ப குருவினால் செய்யப்படும் தீட்சையும் பல வகைப்படும். தீட்சையானது உண்மை அறிவுப்பேறு அடைய மேலான வழியாக இருக்கிறது.
நயன தீட்சை : கருட பாவையினாலே பார்த்து விடம் தீர்த்தல்போல், குரு சீடனைச் சிவபாவனையால் பார்த்த மாயையை விலக்கி தீட்சை அளித்தல்.
பரிச தீட்சை : குரு சிவசக்தியை நினைந்து தனது கையை சீடனுடைய தலையில் வைத்துச் சிவசக்தியை அவனிடம் இறங்கும்படி செய்து மாயையை விலக்கி தீட்சை அளித்தல்.
வாசக தீட்சை : சீடனது மாயையை விலக்க மந்திரங்களுடன், அஞ்செழுத்தையும் அவற்றின் பொருளையும், அவற்றை ஓதும் முறையையும் உணர்த்தி தீட்சை அளித்தல்
மானச தீட்சை : தனது ஆன்மிக ஆற்றலால் குரு, சீடனின் இதயத்தினிடத்தே புகுந்து தனது இருதயத்தில் சிவசைதன்யத்துடன் கலந்தாகப் பாவித்து, சீடசைதன்யத்தை சீடனின் உடலில் செலுத்தி தீட்சை அளித்தல்
சாத்திர தீட்சை : குரு சீடனுக்கு ஆகமங்களில் கூறியுள்ளபடி பதி, பசு, பாச இலக்கணங்களை உணர்த்தி அவன் அறியும்படி செய்து தீட்சை அளித்தல்.
யோக தீட்சை : குரு தனது யோக சக்தியால், சீடனுடைய இதயத்தில் பிரவேசித்து, மாயையை விலக்கி சிவனிடத்தில் ஒப்படைத்து அதன்பின் தீட்சை அளித்தல்
அவுத்திரி தீட்சை : ஓமக்கிரியைகளுடன் சீடனின் மாயை நீங்கும்படி செய்து தீட்சை அளித்தல்.

No comments:

Post a Comment