Friday, July 22, 2011

பகவான் என்பதன் பொருள்-ஈஸ்வரன் என்ற சொல்லுக்குபொருள்-சம்போ மகாதேவா.என்ற சொல்லுக்குபொருள்..

பகவான் என்பதை பசும்+ஆன் என்று பிரிக்கலாம். பசும் என்றால் ஆறு. ஆன் என்றால் உடையவன். நானே எல்லாம் என்கிற ஞானம் உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் பலம், <உலகிலுளள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ஐஸ்வர்யம், எதையும் வெற்றி கொள்ளும் வீரியம் அல்லது தைரியம், உலகத்திலுள்ள எல்லக கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ஆற்றல், சூரிய, சந்திர நட்சத்திரங்கள் என ஒளிவீசும் தேஜஸ் என்ற பிரகாசம் ஆகியவை அவனது ஆறு குணங்களாகும். மொத்தத்தில் ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி என்பதே பகவான் என்பதன் விளக்கமாகும்.

ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிற்கும் தலையானவன், எல்லாப்பொருட்களிலும் எல்லாமுமாக இருந்து அதனை இயக்குபவன், பரிபூரணசக்தியை உடையவன், சகல ஐஸ்வர்யமும் நிறைந்தவன், அனைத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சி செய்பவன் என்று பொருள்.
சம்போ மகாதேவா...தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானை மகாதேவன் என்பர். அவரை சம்போ மகாதேவா என்று வாய்விட்டு கூவி அழைப்பதை கேட்டிருப்பீர்கள். சிவபெருமானுக்கு பல நாமங்கள் உண்டு. அதில் சம்பு என்பதும் ஒன்று, சம்பு என்றால் இன்பத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் என்பது பொருளாகும். சம்பு என்பது பின்னாளில் சாம்பவன், சாம்பான், சாம்பு எனப் பலவகைகளிலும் திரிந்தது.

No comments:

Post a Comment