Tuesday, July 26, 2011

ஞானத்தில் சிறந்த ஞானம் எது

ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர், "ஞானத்தில் சிறந்த ஞானம் எது?" என்று கேட்டார்.
"இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சொர்வளையாமலும் இருப்பதுதான் ஞானம்" என்றார் ஞானி.
வந்தவர், விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனின் கழுதையை காட்டி இதை காலையிலும் மாலையிலும் பார்த்தால் உமக்கு புரியும் என்றார்.
ஞானி கூறிய படியே அவர் காலையும், மாலையும் கழுதையை கவனித்தார்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடம் கேட்டார். ஞானி விளக்கினார், இந்தக்கழுதைக்கு, "காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை" இதை பார்த்து தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன் என்றார்.
துன்பத்திலும், இன்பத்திலும் துவளாமல் இருப்பதே சிறந்த ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த நபர்.

No comments:

Post a Comment