Friday, July 15, 2011

சமையலின் போது கவனிக்க வேண்டியது..

சமையல் செய்யும்போது, அடுப்பிலுள்ள சாதம் பொங்குவது போல, மனதில் ஏதோ குடும்பப் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டு பொங்கினால், அந்த உணவால், சாப்பிடுகின்ற அத்தனை பேர் மனமும் பாதிக்கும். எந்த உணர்வுடன் அந்த உணவு சமைக்கப்பட்டதோ, அதே உணர்வு தான் சாப்பிட்ட அனைவருக்கும் ஏற்படும். ஆனால், இறைநாமத்தை சொல்லிய படியோ, பக்தி பாடல்களை பாடிய படியோ சமைத்தால், நிச்சயம் அந்த உணவிற்கு தனி சக்தி ஏற்படும். அது, சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நன்மையைத் தரும். பெண்கள் சமையல் செய்யும்போது சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே சமைக்கலாம். குழந்தை படிக்கவில்லையே.... வந்தவுடன் அவனை உதைக்க வேண்டும், கணவரின் போக்கு சரியில்லையே, அவரை இன்று ஒரு கை பார்த்து விட வேண்டும், மனைவி சம்பளத்தை ஒழுங்காக தரமாட்டேன் என்கிறாள், இன்று உண்டா இல்லையா என மல்லுக்கட்ட வேண்டும் என்ற எண்ணங்களுடன் சமைக்காமல், இறை கீதங்களை மனநிறைவுடன், நிஜமான பக்தியுடன் பாடியபடியே சமைத்தால், காலப்போக்கில் உணவே, மருந்தாகி, அத்தனை பேர் மனமும் திருந்திவிடும். பக்திக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது.

No comments:

Post a Comment