Monday, July 25, 2011

காசிக்கயிறு தத்துவம்

காசிக்கு போயும் பாவம் தீரவில்லையே என சிலர் சொல்வர். இதற்கு காரணம் தெரியுமா? காசியில் பைரவர் இருக்கிறார். இவரை வணங்கிய பின் கையில் காசிக் கயிறு என்ற கருப்பு நிறக் கயிறை கட்ட வேண்டும். இதில் 5 முடிச்சுகளும் இருக்கும். இதன் தாத்பர்யம் என்ன தெரியுமா? காசிக்கு போவதே பாவங்களைத் தொலைக்கத்தான். அங்கு போய் வந்த பிறகும், ஆசைகளில் சிக்கி நாம் பாவங்களையே செய்கிறோம். அந்த பாவங்களை கரிய இருளுக்கு ஒப்பிட்டு, வலது கையில் கருப்புக்கயிறு கட்டப்படுகிறது. அதைப் பார்க்கும் நேரமெல்லாம் மீண்டும் இந்த இருளில் சிக்கக்கூடாது, அதாவது பாவம் செய்யக்கூடாது என்ற நினைப்பு வர வேண்டும். ஆணவம், பொறாமை, ஆசை, காமம், மாயை (உடல் நிலையானது என்ற எண்ணம்) ஆகியவற்றை அந்த முடிச்சுகள் குறிக்கின்றன. இந்த முடிச்சுகளில் மீண்டும், மீண்டும் சிக்கிக் கொள்ள கூடாது என்ற நினைப்பு கயிற்றைப் பார்த்தால் வரவேண்டும். இதை மீறுபவர்களுக்கு பைரவர் மீண்டும் பிறவித் துன்பத்தைத் தருவார்.

No comments:

Post a Comment