Monday, July 25, 2011

ராமனின் பண்பு!

ராமன், ராவணனை சம்ஹாரம் செய்து, விபீஷணருக்கு பட்டம் சூட்டுகிறார். விபீஷணன், இலங்கைக்கு அதிபதியாகி, நாட்டுக்குத் தலைவன் என்ற அந்தஸ்துக்கு உரியவனாகி விட்டான். முடிசூட்டுவிழா முடிந்ததும், அனுமாரிடம் ராமர் சொல்கிறார் : ஆஞ்சனேயா, விபீஷணன் இப்போது இலங்கைக்கு ராஜா. அதனால் அவரிடம் அனுமதி பெற்று சீதையை அழைத்து வா என்று. விபீஷணனை ராஜாவாக்கியவரே ராமன்தான். ஆனாலும் அவரவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத் தப்பாமல் கொடுப்பவன் ராமன் - இதைப் புரிந்துகொள்ளும் அனுமன். நெகிழ்ச்சியுடன், கண்கள் பனிக்க ராமனைத் தொழுதான்; சீதையை அழைத்துவர விரைந்தான்.

No comments:

Post a Comment