Sunday, July 10, 2011

நந்திதேவர் துதி

நந்திதேவர் துதி
 
வந்திறை அடியில் தாழும் வானவர் மகுடகோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்போம்.
- இந்த நந்திதேவர் துதியை பிரதோஷ காலத்தில் சொல்லிவந்தால் நல்ல பலன் கிடைக்கும். 
 
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம் புரியும் கனிந்த நந்தி 
 
பள்ளியறை பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதி சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கு உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்கள் துயர்போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதோரு வில்வமே ஏற்ற நந்தி
வரும்காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசுதம் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளம் அகற்றும் நந்தி
கெட்ட கனா அத்தனையும் போக்கும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றி தரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி
வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்திரு புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ் குவிக்க எம் இல்லம் வருக நந்தி
 

No comments:

Post a Comment