Monday, July 25, 2011

முனிவர்கள் சாப்பிடாமல் வாழ்ந்தது எப்படி?

புராணங்களில் முனிவர்கள் தேவர்கள், அசுரர்கள் ஆகிய எல்லா தரப்பினருமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவே இல்லாமல், தவம் செய்ததாகவும், காடுகளில் சுற்றி திரிந்ததாகவும் படிக்கிறோம். இதெல்லாம் சாத்தியமே இல்லை, கட்டுக்கதை என சிலர் சொல்வார்கள். ஆனால், இதிலுள்ள சூட்சுமம் தெரியுமா? யோகா என்ற அரிய கலை, அக்காலத்தில் ஒவ்வொரு தனி மனிதனாலும் விரும்பி செய்யப்பட்டது. இதில் ஒன்று சூர்ய யோகா. யோகா என்றால் ஒரு மித்தல் என்று பொருள். மனதை ஒருமிக்க செய்வது யோகா. பெண்கள் அதிகாலையில் கோலமிடுவது கூட ஒரு வகை யோகாதான். ஏனெனில், மனம் ஒன்றியிருந்தால் தான் புள்ளிகள் வைத்து அதை இணைக்க முடியும். மன ஒருமைப்பாடு இல்லாதவர்கள் தான், அழித்து அழித்து கோலம் போடுவார்கள். இதுபோல, சூரியனிடம் உள்ள ஒளிக்கதிர்களில் இருந்து வெளிப்படும் சக்தியை தன் பக்கம் இழுத்து மனதை ஒருமைப்படுத்துதலே சூர்ய யோகா ஆகும். இந்த யோகாவை செய்பவர்களின் அடிமனதில் தங்கியுள்ள கோபம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் ஆகியவை தானாகவே மாறி, நல்ல சிந்தனைகள் வெளிப்படும். இந்த யோகாவின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்தியால் பல ஆண்டுகள் உணவின்றி கூட வாழ முடியும். முனிவர்கள் இந்த யோகா மூலம் தான் உணவின்றி கிடந்தார்கள். இப்போதும் சில இடங்களில் இந்த யோகா கற்றுத்தரப்படுகிறது.

No comments:

Post a Comment