Friday, July 8, 2011

பைரவர்

பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் பூட்டி அந்த சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோவிலை பூட்டுவது மரபு.
இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் சேத்திர பாலகர் என்று கூறுவர். சனீஸ்வரருக்கு குருவாகவும், அதிதெய்வமாகவும் விளங்குபவர் பைரவர். பைரவர் உருவங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானது கால பைரவர் திருவுருவம் ஆகும். பைரவரில் 64 அம்சங்கள் உடைய திருவுருவங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன .
எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதேபோன்று நவக்கிரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும்.

No comments:

Post a Comment