Thursday, July 21, 2011

ஐந்துமுக லிங்கவிவரம்

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரத்தில் கூறி இருக்கிறார்.லிங்கம் என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் மங்கலத்தைத் தரும் பரம்பொருள் எனவும், அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும், மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன. ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம். இல்லங்களில் வைத்து பூஜிக்கும் லிங்கம் சலம். ஈசன் தன் கருணை பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.
கிழக்கில் தத்புருஷம், மேற்கில் சத்யோசாதம், மந்தகத்தில் ஈசானம், தெற்கே அகோரம், வடக்கே வாமதேவம் என்பது ஐந்துமுக லிங்கவிவரம், ஆட்யலிங்கம் என்பது சிரம் பிறைச் சந்திர வடிவமாக உள்ளது. அநாட்ய லிங்கம் என்பது சிரம் வெள்ளரிப்பழ வடிவம் கொண்டது. சர்வ சமலிங்கமானது குடை போன்ற சிரத்தையுடையது. சுரேட்யலிங்கம் எனப்படுவது உச்சியில் கோழி முட்டை வடிவம் கொண்டது என நான்கு லிங்க வடிவங்கள் சரசிவாகத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment