Friday, July 15, 2011

திருக்கல்யாணம் இறைவனுக்கு ஏன்?

இருமைப்பண்பு இல்லாமல் உலகமே இல்லை. தனித்து சாதனை படைப்பது என்பது நடக்காத ஒன்று. நடந்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியமாகும் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சார சக்தியை ஆராய்ந்து பார்த்தால் அதனுள் இருவித சக்திகள் இருப்பதை அறியலாம். ஒன்று பாசிடிவ், மற்றொன்று நெகடிவ். இவ்விரு ஆற்றலும் இணைந்தே மின்சக்தி உண்டாகிறது. இதைப்போன்று உலகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பேராற்றலை சக்தி, சிவம் என்றழைக்கிறோம். சிவம் சக்தியோடு சேர்ந்து விளங்கினால் உலகவுயிர்களும் ஆண், பெண்தன்மையில் கூடி மகிழும். இறைவன் இன்புற்றிருப்பது உயிர்களின் நலத்திற்காகவே. மீன் தான் இடும் முட்டைகளை கண்ணால் பார்க்க முட்டை பொரித்து குஞ்சாவது போல, மீனாட்சியம்மையின் கடைக்கண் பார்வையால் உலகவுயிர்கள் நற்கதி அடைகின்றன. தேவி இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள். பாலில் சுவை போலவும், தீயில் நெருப்பு போலவும், மணியில் ஒளி போலவும் உறைபவள். அர்த்த நாரீஸ்வரராக தோன்றிய போது இறைவனில் சரிபாதி பெற்ற பெருமையுடையவள். மலையத்துவஜபாண்டியனின் மகளாக தோன்றி தவம் இயற்றி, அந்த பரமனையே கணவராக அடைந்தாள். அம்மையின் அருந்தவத்திற்கு இறைவன் மகிழ்ந்து, காட்சி கொடுத்து, அவளைத் திருமணம் செய்து கொண்டதை இத்திருக் கல்யாண திருவிழா நினைவுறுத்துகிறது

No comments:

Post a Comment