Monday, July 25, 2011

ஸ்ரீசக்ர பிரதிஷ்டை

ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்கள் மிகவும் விசேஷ பலன்களைத் தரும் கோயில்களாக கருதப்படுகிறது. 51 ஆட்சரங்களையும், பஞ்சபூதத்தில் இணைந்து அமைக்கப்படுவதுதான் ஸ்ரீ சக்ரம். ஆதிசங்கரர், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து அம்பாளை வழிபட்டுள்ளார். மீனாட்சி பஞ்சரத்னம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் ஆகிய இரு நூல்களையும் இத்தலத்தில் வைத்தே இயற்றினார். இந்நூல்களில் அம்பாளை பஞ்ச ரத்தினங்களுடன் ஒப்பிட்டும், வழிபாட்டு ஸ்தோத்திரங்களையும் பாடியுள்ளார்

No comments:

Post a Comment