Monday, July 25, 2011

தண்ணீரை பழிக்காதீர்கள்!

தண்ணீர் மிகவும் புனிதமானது. தண்ணீரை, சிவனின் தலையிலிருக்கும் கங்காதேவியென்றும், மறைந்திருக்கும் அக்னியென்றும் சொல்வதுண்டு. எனவே, தண்ணீரில் மல, ஜலம் கழிக்கவோ, எச்சில் துப்பவோ, ஆடை இல்லாமல் நீராடுவதோ கூடாது. இவ்வாறு செய்து அதனை அவமதித்தல் கூடாது என்கிறது, தைத்திரீயாரண் என்ற நூல். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம். அனைத்து தேவதைகளின் அம்சமாக தண்ணீர் இருக்கிறது என்பது இதன் பொருள். எனவே தாயையும் தண்ணீரையும் பழிக்க கூடாது என முன்னோர்கள் சொல்லியுள்ளனர். புனித நீர் நிறைந்த பூரண கும்பத்தில் எந்த தெய்வத்தையும் ஆவாஹனம் (எழுந்தருளச் செய்தல்) செய்து பூஜிக்கலாம்.

No comments:

Post a Comment