Monday, July 25, 2011

முடியாதது இல்லை

பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், ஒரு சமயம் உணவு உட்கொள்ளுவதற்காக அமர்ந்தபோது, துரோணாச்சாரியாரின் சீடன் ஒருவன் வந்தான். குருபிரான், விளக்கை அணைத்துவிட்டு சாப்பிடும்படி சொல்லியனுப்பினார் என்றான். இது இரவு நேரம்; விளக்கை அணைத்து விட்டால் இருட்டாக இருக்குமே ... எப்படிச் சாப்பிடுவது ? என்று திகைத்த அர்ச்சுனனைப் பார்த்து, இது குருபிரான் கட்டளை என்று மீண்டும் அழுத்தமாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சீடன் அகன்றான். தட்டில் உணவு; அருகே விளக்கு ! உடனே விளக்கை அணைத்து விட்டு செய்வதறியாது சில வினாடி இருந்தான். மனம் குழும்பியது. ஆனாலும் மெல்ல உணவை பிசைந்து உண்ணத் துவங்கினான். என்ன ஆச்சரியம் ! சில நிமிடங்களில் கையானது இருட்டிலும் தடுமாறாமல் வாய்க்குச் சென்று கவளத்தைக் கொடுத்து விட்டு, மீண்டும் உணவுத் தட்டுக்குச் சென்று தேவையானதை எடுத்தது. இப்போது அர்ச்சுனனின் அறிவு விழித்துக் கொண்டது. குருபிரான் அவனுக்கு எதை விளக்க விரும்பினார் என்பதைப் புரிந்து கொண்டான். நன்கு பழகிவிட்டால் இருட்டிலும் இலக்கை அடிக்கலாம் என்று முடிவு செய்தான். மறுநாளிலிருந்து இரவிலும் அவன் வில்வித்தை பயிலும் நாண் ஒலி கேட்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment