Monday, July 25, 2011

க்ஷத்திரியன்

முற்காலத்தில் நாட்டை ஆட்சி செய்த மன்னர்களை க்ஷத்திரியர்கள் என அழைத்தனர். இந்த பெயர் வந்த காரணம் தெரியுமா? கிருதயுகத்தில் மக்களும், மன்னர்களும் தர்மம் தவறாமல் நடந்து வந்தனர். எனவே, அந்த யுகத்தில் காவல்துறை, நீதித்துறையெல்லாம் கிடையாது. பின்னர் வந்த கலியுகத்தின் துவக்கத்தில்தான் மக்கள் ஆசைக்கு அடிமையாகி தங்களுக்குள் அடித்துக் கொண்டனர். வேதம் படிப்பதையும், தர்மப்படி நடப்பதையும் கைவிட்டனர். மக்கள் தர்மத்தை கடைபிடிப்பதற்காக, பிரம்மா தர்மத்தை கடைபிடிக்கும் நியதிகள் அடங்கிய, தண்டநூல் என்ற நூலை இயற்றினார். ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட நூல் இது. இந்நூலை சிவன் பத்தாயிரம் ஸ்லோகங்களாக சுருக்கி, வைசாலாட்சகம் என பெயர் வைத்தார். இந்திரனோ அதை மேலும் சுருக்கி ஐந்தாயிரம் ஸ்லோகமாக்கினான். குரு பகவான் அதை மூவாயிரம் தர்மம் கொண்டதாக சுருக்கினார். சுக்ராச்சாரியார் அதை ஆயிரமாக குறைத்து எழுதினார். இந்த நூலில் கூறப்பட்டபடி, பூமியில் ஆட்சி நடத்த ஒரு தலைவனை நியமிக்கும்படி பெருமாளிடம் தேவர்கள் வேண்டினர். அவர் தன் மானசீக புத்திரனான விரஜன் என்பவனைத் தலைவனாக்கினார். அவனது பரம்பரையில் வந்த ஒருவன் பிருது எனப்பட்டான். அவனது பெயராலேயே பூமிக்கு, பிருத்வி என்று பெயர் ஏற்பட்டது. அவனை க்ஷத்திரிய ராஜா என்று அழைத்தனர். க்ஷத்திரியன் என்றால் நல்லாட்சி நடத்துபவன் என்று பொருள். அதன்பிறகு வந்த மன்னர்களை அப்படியே, க்ஷத்திரியன் என்று அழைத்தனர்.

No comments:

Post a Comment