Sunday, July 10, 2011

நாத விந்துக லாநீ நமோநம .....................

நாத விந்துக லாநீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டிதஸ்வாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாதா நமோநம அருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்
ஓதலுங் குண ஆசார நீதியும்
ஈரமுங் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டலமீதே மனோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா
ஆதரம் பயில் ஆருரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடேமு னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி வையிலேகி
ஆதியந்த உலா ஆக பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமானே!

No comments:

Post a Comment