Monday, July 25, 2011

வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை தங்கியது ஏன்?

ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். அதுபோல், சீதாதேவியும் பூமியைத் தங்கக் கலப்பை கொண்டு உழுதபோது, ஜனகருக்கு கிடைத்தாள். எனவே பூமியின் மகள் ஆகிறாள். ஆக, இருவரும் சகோதர சகோதரி ஆகிறார்கள். பெண்ணை தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புவதே நமது கலாசாரம். ராமபிரானும், அதையே செய்தார். சீதாதேவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கற்பின் திறனை அயோத்தியை சார்ந்த மக்களில் சிலர் சந்தேகப்பட்டு பேசவே, ராமன் அவளை காட்டுக்கு அனுப்பினார். வால்மீகியின் ஆஸ்ரமத்தில் அவள் தங்கியிருக்கட்டும் என நினைத்தார். அந்த வகையில், வால்மீகியின் ஆஸ்ரமத்தில் சீதா தங்கினாள். அங்கு லவகுசரைப் பெற்றெடுத்தாள். சீதாவைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான்.

No comments:

Post a Comment