Saturday, July 23, 2011

சல்லடை தத்துவம்!

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது ஒரு சல்லடையை வைத்து அதன் வழியாக பன்னீர், இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை ஊற்றுகின்றனர். சல்லடை பயன்படுத்துவது தூசியை வடிகட்டுவதற்காக. இதன் தத்துவம் என்ன தெரியுமா சல்லடையில் புடைக்கப்படும் தானியங்களில் இருக்கும் குப்பை வடிகட்டப்படும். நல்லதை மட்டுமே தன்வழியாக அனுமதிக்கும். இதைப் பார்க்கும் மனிதன் தன்னிடமுள்ள கெட்ட குணங்களையெல்லாம் வடிகட்டி விட்டு, நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளத்தான்.

No comments:

Post a Comment