Friday, September 16, 2011

நமசிவாய, சிவாய நம.. எதை ஜெபிப்பது சரியான முறை?

நமசிவாய, சிவாய நம.. எதை ஜெபிப்பது சரியான முறை?

இரண்டுமே சரி தான். நமசிவாய என்பது எல்லோருக்கும் பொது. சிவாயநம என்பது தீட்சை பெற்று சிவபூஜை செய்பவர்களுக்கு மாத்திரம் உரியது. நமசிவாய என்பது தான் முதன்முதலில் சமயதீட்சை பெறுபவர்களுக்கு உபதேசிக்கப்படுவதாகும். இதை ஜெபித்தாலே, இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் சவுபாக்யங்கள் அனைத்தும் கிட்டிவிடும்.

* மொட்டை மாடியில் ஹோமங்கள் நடத்தலாமா?

நடத்தலாம். ஆனால், மிகமிக பாதுகாப்பான கூடாரம் அல்லது கொட்டகை போன்று ஒரு மேற்கூரை அமைத்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளியில் ஹோமம் செய்வது அவ்வளவு சிறப்புடையது அல்ல.

No comments:

Post a Comment