Saturday, February 4, 2012

அதிகாலையில் எழுபவரே உயர் ஜாதியினர்


அதிகாலையில் எழுபவரே உயர் ஜாதி உறுப்பினர்
நம்மிடையே பல ஜாதிப்பிரிவுகள் உள்ளன. அவரவர், தங்கள் ஜாதியின் சிறப்பை எடுத்துக்கூறி உயர்ந்த ஜாதியாக கொள்கிறார்கள். ஆனால், ""யாரொருவன் காலையில் சூரியனைப் பார்க்கிறானோ அவனே உயர்ந்த ஜாதிக்காரன்,'' என்கிறார் வேதத்திற்கு பதம் பிரித்த அத்ரி மகரிஷி. ""உதைநம் கோபா அத்ருஷன் அத்ருஷன் உதஹார்ய: அத்ருஷன் அத்ருஷன்'' என்கிறார். இதற்கு ""சூரியனை முதலில் பார்க்கும் ஜாதி உயர்ந்தது,'' என்று பொருள். அதாவது, காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எந்த நாடு எழுகிறதோ அந்த நாடே உருப்படும்.
திருப்பாவையில் ஆண்டாள் இதையே "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்'' என்கிறாள். "மதி' என்றால் "ஒளி' என்றும் பொருளுண்டு. ஆயர்பாடி மக்கள், பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு காலையிலேயே கிளம்புகிறார்கள். அவர்களே முதலில் சூரியனைப் பார்க்கிறார்கள். அடுத்து பெண்கள் குடங்களுடன் நீராட கிளம்பி விட்டார்கள். அவர்கள் அடுத்ததாக சூரியனைப் பார்க்கிறார்கள். அவர்களும் கொடுத்து வைத்தவர்களே! இவர்களுக்கு பிறகு தான் சூரிய வெளிச்சம் தரையில் விழுந்து பூமியே சூரியனைப் பார்க்கிறதாம். மதியை நிலா என்று எடுத்துக் கொள்ளலாம். பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் ஒளிரும் நாளே நற்செயல்கள் செய்ய உகந்த நாள். அப்படிப்பட்ட உயர்ந்த நாளில் மார்கழி நோன்பு துவங்குகிறது, இதனால் தான் ராமபிரான் சூரியகுலத்திலும், கிருஷ்ணர் சந்திர குலத்திலும் அவதரித்தனர். இனிமேலாவது, சூரியோதத்துக்கு முன் எழும் பழக்கத்தை மேற்கொண்டு உயர்ஜாதியில் ஒரு உறுப்பினர் ஆவீர்களா

No comments:

Post a Comment