Saturday, February 11, 2012

ராமன் என்றால் நன்மை மட்டுமே

ராவணன் சீதையை அடைய பேராசையுடன் அலைந்தான். அந்த சமயத்தில் அவனுடைய பரிவாரத்தில் இருந்தவர்கள் யோசனை ஒன்றைத் தெரிவித்தனர். "" நினைத்த வடிவத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தி படைத்தவர் நீங்கள். ஏன் ராமனாக மாறி சீதையிடம் செல்லக் கூடாது. ராமனின் வடிவைக் கண்டதும் அவள் மயங்கி விடுவாள். சுலபத்தில் உங்கள் எண்ணமும் பலித்துவிடும் அல்லவா?,'' என்றனர். ""நீங்கள் சொல்லித் தானா அது எனக்குத் தெரிய வேண்டும்? ஒருநாள் ராமனாக உருமாறி நின்றேன். ஆனால், சீதையை வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை விட்டு நீங்கி விட்டது. மாற்றான் மனைவியைத் தாயாக வணங்க வேண்டும் என்ற சிந்தனை உண்டானது. நான் என்ன செய்யட்டும்,'' என்று வருந்தினான். ராமனின் உயர்வைச் சொல்வதற்காக சொல்லப்படும் கர்ண பரம்பரைக் கதை இது. 

No comments:

Post a Comment