Tuesday, April 10, 2012

சூரியனே கண்கண்ட தெய்வம்.

சூரியனே கண்கண்ட தெய்வம். "சூரிய வழிபாட்டினை முறையாக மேற் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்; கண்ணொளி பிரகாசிக் கும்; சருமப் பாதுகாப்பு ஏற்படும்' என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

"சூரியனிடமிருந்து வெளிவரும் ஃபோட் டான் என்ற ஒளிசக்தி உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பிராண சக்தியைக் கொடுக்கிறது' என்று அறிவியல் தெரிவிக்கிறது.

சூரிய ஒளியானது ஏழு வண்ணங்களைக் கொண்டது. இதைத்தான், "சூரியன் ஏழு குதிரை களைப் பூட்டிய ரதத்தில் பயணம் செய்கிறான்' என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன.




"சூரியன் காலையில் ரிக் வேத சொரூபி யாகவும்; மதியத்தில் யஜுர் வேத சொரூபியாக வும்; மாலை வேளையில் சாம வேத சொரூபி யாகவும் திகழ்கிறான்' என்று மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

"தாவரங்கள் சூரிய ஒளியை ஈர்ப்பதுபோல் நாமும் சூரிய ஒளியை நம் கண்கள் மூலம் ஈர்த் தால் நமது உடல், மனம் எல்லாமே ஆரோக் கியமாகத் திகழும்' என்று சூரிய யோகம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறுவர்.

தனுர் ராசியை விட்டு சூரியன் மகர ராசிக் குச் செல்லும் நாளை மகர சங்கராந்தி என்கி றோம். இந்தப் புனித நாள் தானம், தர்மம், தர்ப் பணம் முதலியவற்றைச் செய்ய உகந்த காலம் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் மகர மாதம் என்று போற்றப்படுகிறது. இதுவே தை மாதம் ஆகும். மகர சங்கராந்தியான தை மாத முதல் தேதியில்தான் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தை மாதம் சூரிய பகவானை வழிபட உகந்த மாதமாகும். அதனால் தான் தைமாதப் பிறப்பை பொங்கல் விழா வாகக் கொண்டாடுகிறோம். கரும்பினால் பந்த லிட்டு, பொங்கல் படைத்து சூரியனை வழிபடு கிறோம். அன்று விரதம் மேற்கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்து, சூரியனை அர்ச்சித்து வழிபட்டால் கிடைக்கும் பலன் ஏராளம் என்பர்.

அந்தக் காலத்தில் இருபத்தெட்டு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடினார்களாம்.

அப்போது இந்த விழாவிற்கு இந்திர விழா என்று பெயர். மழைக்குரிய தெய்வம் இந்திரன் என்பதால், இந்திரனை வழிபட்டால் மாதம் மும்மாரி பெய்யும் என்பது நம்பிக்கை. பிற்காலத் தில் சூரியனின் அருமை பெருமைகளை அறிந்த மக்கள், சூரியனே வானிலையை நிர்ணயிக்கிறார் என்ற நம்பிக்கை வந்து, தங்கள்முன் காட்சி தரும் சூரியனைத் தெய்வமாக வழிபட்டார்கள். தங்கள் விளைச்சலுக்கு சூரியனே காரணம் என்பதால், தை மாதம் முதல் தேதி பொங்கலிட்டு சூரியனை வழிபட்டார்கள்.



பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை ஆகும். "பழையன கழிதலும் புதியன புகுதலும்' போகிப் பண்டிகையின் தத்துவமாகும். இந்தப் பண்டிகை துயரங்களைப் போக்குவதால் "போக்கி' என்றும் சொல்வார்கள். போகியைத் தொடர்ந்து தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப் படுகிறது. இதில் காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கன்றுப் பொங்கல், காளையர் பொங்கல் என்று வேறு பெயர்களும் உண்டு. இவையெல்லாம் காரணப் பெயர்கள் ஆகும்.

உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவான மாட்டுப் பொங்கலன்று, விவசாயத்திற்குப் பயன்பட்ட காளை மாடுகளுக்கும், தங்கள் இல்லத்தில் பால் கொடுக்கும் பசு மாடுகளுக்கும் விழா எடுப்பார்கள். மாடுகளை நன்கு குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கலிட்டு வழிபடுவதுடன், அன்று மாடுகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்புப் பூஜையும் செய்வதை கிராமப்புறத்தில் காணலாம்.


பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். இது உறவினர் களையும் நண்பர்களையும் காணும் நாளாகும். இந்த நாளில் சுற்றுலா செல்வது விரும்பப் படுகிறது. பொதுவாக, சென்னை மாநகரத்தின் அருகில் உள்ள கிராமப்புற மக்கள், அன்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கடல் அரசனையும் வழிபடுவார் கள். மேலும் கிராமங்களில் வசதி படைத்த பெரிய மனிதர்களிடம் பணியாற் றும் விவசாயத் தொழி லாளர்கள், அன்று தங்கள் எஜமானர்களைக் காண்பது வழக்கம். அப்போது
அவர்களுக்குப் பரிசு கொடுத்து செல்வந்தர்கள் கௌரவிப்பார்கள். இதனால் இதை காணும் பொங்கல் என்பர். சில கிராமங்களில் சிறுமியர் கள் ஒன்றுகூடி, தங்கள் உறவினர்கள், தெரிந் தவர்கள் இல்லங்களுக்குச் சென்று கும்மியடித் துப் பரிசு பெறுவார்கள்.

இந்தப் பொங்கல் விழாவினையொட்டி "ஜல்லிக்கட்டு' என்னும் காளை மாடுகள் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கென்று சில கட்டுப்பாடுகளும் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு இணையாக எருதுவிடும் விழாவும் சில கிராமங்களில் நடைபெறுகின்றது.

சூரியன் பொதுவானவர். சூரிய பகவானின் அதிதேவதையாக சிவபெருமான் திகழ்கிறார். சூரியனின் மறுவுருவாக சிவபெருமான் கருதப் படுகிறார். எனவே சைவர்கள் சூரிய வழி பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுபோல் வைணவர்களும் சூரியனை ஸ்ரீநாராயணனின் ஓர் அம்சமாகக் கருது கிறார்கள். எனவே, சூரிய பகவானை சூரிய நாராயணன் என்று போற்றுகிறார்கள்.

புராணக் கூற்றின்படி சூரியன், காஸ்பியர்- அதிதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவருக்கு பல பெயர்கள் உண்டு. சூரியன், விஸ்வ கர்மாவின் மகளான சஞ்சிகை என்பவளை மணந்தார். அவள் சூரியனின் உஷ்ணம் தாங்காமல் தன்னைப்போல் நிழல் உருவைத் தோற்றுவித்து சூரியனிடம் வாழும்படி கேட்டுக் கொண்டாள். அவள்தான் சாயாதேவி. ஆக, சூரியனுக்கு இரு மனைவிகள் என்று புராணம் கூறுகிறது. சஞ்சிகைக்கு வைவஸ்வதமனு, யமன், யமுனா என்ற மக்களும்; சாயாவிற்கு சாவர்னிமனு, ச்ருதகர்மா (சனிபகவான்) என்ற மகன்களும் உண்டு. சூரியனை விட்டுப் பிரிந்திருந்த சஞ்சிகை சிறிது காலத்திற்குப்பின் சூரியனுடன் இணைந்தாள்; அவர்களுக்கு அஸ்வினி தேவர்கள் பிறந்தார்கள் என்று புராணம் கூறுகிறது.

சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பெயர் பெறுகிறான். அவை: மித்ரன், ரவி, சூரியன், பானு, சுகன், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித் யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன்.

சூரியன் ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருவாராம். வசந்த ருது என்று சொல்லப் படுகிற வசந்த காலத்தில் பொன் வண்ணத்திலும்; கிரிஷ்மருது எனப்படும் வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும்; வர்ஷருது என்று சொல்லப்படும் மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும்; சரத்ருது என்று சொல்லப்படும் கார்காலத்தில் கருமை நிறத்திலும்; ஹேமந்தருது என்று சொல்லப்படும் முன்பனிக் காலத்தில் தாமரை நிறத்திலும்; சிசிரருது எனப்படும் பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன.

கண்கண்ட தெய்வமான சூரியனை பொங்கல் திருநாளில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் முறைப்படி வழிபட்டால் வாழ்வில் வசந்தம் காணலாம். சூரிய வழிபாட்டினை தினமும் கடைப்பிடித்து நலம்பெற்று வாழ்வோமாக!

No comments:

Post a Comment