Sunday, April 1, 2012

கலிபுருஷன் தங்கும் இடம்

கலியுகம் துவங்கியதும், அதன் அதிபதியான கலிபுருஷன், அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜா முன் வந்தான்.
""மகாராஜா! நான் புதிதாக பூலோகம் வந்தவன். தங்க இடம் கொடுங்கள்,'' என்று கேட்டான்.
""உஹும்...உயர்ந்த மனநிலையுடன் ஆட்சிசெய்யும் என் நாட்டில் உனக்கு இடமில்லை,'' என்று மறுத்தான் பரீட்சித்து. ""அப்படி சொல்லாதீர்கள். நாடு முழுக்க பரவியிருக்க வேண்டுமென நான் கேட்கவில்லை.
குறிப்பிட்ட இடத்தைச் சொல்லுங்கள்,'' என்று கெஞ்சினான்.
""சரி..மது அருந்தும் இடம், சூதாடுமிடம், மிருகங்களை வதை செய்யும் இடம், ஒற்றுமையில்லாத சகோதர, சகோதரிகள் இருக்குமிடம் ஆகியவற்றில் நீ தங்கலாம்,' 'என அனுமதித்தார் பரீட்சித்து.
""ஒரே நேரத்தில், நான்கு இடங்களில் தங்குவது கஷ்டம். ஏதோ, ஒரு இடத்தைக் குறிப்பிடுங்கள். அங்கே தங்கிக் கொள்கிறேன்,'' என்றான். பரீட்சித்து அவனிடம், ஒரு தங்கக் கட்டியைக் கொடுத்து, ""கலியே! நீ பணத்தில் தங்கியிரு. பணத்தில் நான் சொன்ன நான்கும் இருக்கிறது,'' என்றார்.
கலிக்கு ஏக சந்தோஷம்.
""நன்றி மகாராஜா! இந்த பணத்தில் நான் தங்குவேன். மக்களை அமைதி இழக்கச் செய்வேன். ஆயிரக்கணக்கானவர்கள் என் பிடியில் இருப்பார்கள். அவர்களிடையே கலகத்தை ஏற்படுத்துவேன்,' 'என்று கூறி விடைபெற்றான்.
கலிபுருஷன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பது நம் எல்@லாருக்குமே தெரியும்

No comments:

Post a Comment