Tuesday, September 4, 2012

பிரம்மன் செய்த 10 யாகம்

காசியில் 64 படித்துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. அசி நதி கங்கையில் கலக்கும் துறை, தட்சசுவமேத காட், வருண சங்கம காட், பஞ்சு கங்கா காட், மணி கர்ணிகா காட், இவை முக்கிய ஸ்தான கட்டங்கள். பிரும்ம தேவர் பத்து அசுவமேத யாகங்கள் செய்த இடமாம். அதனால் தசாச்வமேத காட், மகா விஷ்ணு ஈசுவரனை மனத்தில் இருத்தித் தவம் செய்தபோது மகிழ்ச்சி பொங்கத் தன் தலையை ஆட்டியபோது சிவபெருமானுடைய காதில் அணிந்திருந்த குண்டலம் கழன்று இந்த இடத்தில் விழுந்ததாம். அதனால் மணி கர்ணிகா காட், அரிச்சந்தர காட் அனைவருக்கும் தெரியும். முக்தியளிக்கும் இடம். கேதார் காட்டில் ஒரு அழகான கோவில் இருக்கிறது. கேதாரேசுவரரையும், கவுரி அம்மனையும் தரிசிக்கலாம். ஸ்நானம் செய்து கரையேறியதும் சுமங்கலிகளுக்கு ரவிக்கைத் துண்டு தருவார்கள். கங்கையே தந்ததாக நினைத்து அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment