Wednesday, September 5, 2012

சுந்தரகாண்டத்தில் உள்ள 68 அத்தியாயங்கள் .

சுந்தரகாண்டத்தில் மொத்தம் 68 அத்தியாயங்கள் உள்ளன. இவற்றில் தினமும் ஒரு அத்தியாயம் வீதம் படிக்கலாம். உங்கள் வசதிக்கு எத்தனை அத்தி யாயம் வேண்டுமானாலும் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு பலன் உண்டு. சிறப்பான அந்த 68 அத்தியாயங்கள் வருமாறு:- 1.அனுமன் கடலைத் தாண்டுதல். 2.அனுமன் இலங்கைக்குள் பிரவேசித்தல். 3.அனுமன் லங்காதேவியை வெல்லுதல். 4.அனுமன் இலங்கையை சுற்றி வருதல். 5.சீதையை அனுமன் தேடுதல். 6.அனுமன், ராவணன் வீட்டுக்கு செëல்லுதல். 7.புஷ்பக விமானத்தை அனுமன் காணுதல். 8.புஷ்பக விமான வர்ணனை. 9.புஷ்பக விமான வர்ணனை தொடர்ச்சி. 10.அனுமன், ராவணனின் மனைவி மண்டோ தரியைப் பார்த்தல். 11.பான சாலையில் சீதையை தேடுதல். 12.சீதையை கண்டு பிடிக்க முடியாததால் அனு மன் வருந்துதல். 13.அனுமனின் கவலை தொடர்ந்தது. 14.அசோகவனத்தில் சீதையை அனுமன் தேடு தல். 15.சீதையை அனுமன் பார்த்தல். 16.சீதையின் நிலை கண்டு அனுமன் வருந்துதல். 17.சீதைக்கு காவலாக அரக்கியர்கள் இருப்பதை அனுமன் பார்த்தல். 18.அசோகவனத்துக்கு ராவணன் வருகை. 19.ராவணனை பார்த்து சீதை மனம் கலங்குதல். 20.ராமனை மறந்து மனம் மாறும்படி சீதையிடம் ராவணன் வற்புறுத்துதல். 21.சீதை ராவணனை அலட்சியப்படுத்துதல். 22.சீதையை ராவணன் மிரட்டுதல். 23.ராவணன் சென்ற பிறகு சீதைக்கு அரக்கிகள் உபதேசம் செய்தல். 24.சீதையை அரக்கிகள் அதட்டுதல். 25.சீதை மனம் உடைந்து கவலைப்படுதல். 26.சீதை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தல். 27.விபீஷணனின் மகள் திரிஜடை"ராமன் வெல்வான்'' என கனவு கண்டதாக கூறுதல். 28.சீதை உயிரை விட துணிதல். 29.சீதைக்கு நல்ல சகுணங்கள் தோன்றுதல். 30.சீதையை எவ்வாறு காப்பாற்றுவது என அனுமன் யோசித்தல். 31.ஸ்ரீராம சரித்திரத்தை அனுமன் கூறுதல். 32.சீதை அனுமனை பார்த்தல். 33.சீதையுடன் அனுமன் பேசுதல். 34.ஸ்ரீராமர் பற்றி சீதையிடம் அனுமன் விளக்கமாக கூறுதல். 35.சீதைக்கு அனுமன் மீது ஏற்பட்ட சந்தேகம் தீர்ந்தது. 36.சீதையிடம் ராமனின் கணையாழியை அனுமன் கொடுத்தல். 37.அனுமன் பேருருவம் எடுத்து நின்றல். 38.சீதை தன் சூடாமணியை அனுமனிடம் கொடுத்தல். 39.சீதையை அனுமன் சமரசம் செய்தல். 40.சீதை அனுமனுக்கு விடை கொடுத்தல். 41.அசோகவனத்தை அனுமன் அழித்தல். 42.ராவணன் படைகளை அனுமன் அழித்தல். 43.அரக்கர்களின் குல தெய்வ ஆலயமான சைத்திய மண்டபத்தை அனுமன் அழித்தல். 44.அனுமனை அழிக்க வந்த பிரஹஸ்தனின் மகன் ஜம்புமாலி அழிதல். 45.ராவணன் உத்தரவுபடி வந்த 7 மந்திரி குமாரர்களை அனுமன் அழித்தல். 46.பஞ்ச சேனாதிபதிகளை அனுமன் அழித்தல். 47.ராவணனின் மகன் அட்சகுமாரனை அனுமன் கொல்லுதல். 48.அடுத்து ராவணன் தன் மற்றொரு மகன் இந்திரஜித்தை போருக்கு அனுப்பினார். இந்திரஜித் விட்ட பிரம்மாஸ்ëத்திரத்துக்கு அனுமன் வேண்டும் என்றே கட்டுப்பட்டார். 49.ராவணனை கண்டு அனுமன் ஆச்சரியப்படுதல். 50.அனுமனுக்கும் ராவணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுதல். 51.ராவணனுக்கு அனுமன் உபதேசம் செய்தல். 52.அனுமனை கொல்ல ராவணன் உத்தரவிட்டதை விபீஷணன் தடுத்து நிறுத்துதல். 53.அனுமனின் வாலில் தீ வைக்கப்பட்டது. 54.அனுமன் இலங்கையை எரித்தல். 55.சீதைக்கு என்ன ஆனதோ என்று அனுமன் மனம் கலங்குதல். 56.சீதையை கண்டு அவரிடம் விடை பெறுதல். 57.அனுமன் திரும்பி வருதல். 58.இலங்கை பற்றி அனுமன் கூறுதல். 59.அனுமன் அடுத்து செய்ய வேண்டியது பற்றி ஆலோசித்தல். 60.சீதையை மீட்க அங்கதன், ஜாம்பவான் திட்டமிடுதல். 61.மதுவனத்தை வானரப்படைகள் அழித்தல். 62.மதுவன காவல் தலைவன் ததிமுகனுக்கும் வானரப்படைகளுக்கும் மோதல் ஏற்படுதல். 63. சுக்ரீவனிடம் ததிமுகன் முறையீடு. 64."கண்டேன் சீதையை''என்று ராமரிடம் அனுமன் கூறுதல். 65.சீதை நிலை பற்றி ராமனிடம் அனுமன் எடுத்து கூறுதல். 66.சீதையை பார்க்க ராமன் ஆசைப்படுதல். 67.சீதை சொன்னதை ராமனிடம் அனுமன் விளக்குதல். 68.அனுமன் வார்த்தையால் ராமர் மனம் மகிழ்ச்சி அடைதல்.*

No comments:

Post a Comment