Tuesday, September 11, 2012

மனுநீதிச் சோழன்

அந்தக் காலத்தில் நீதியை நிலை நாட்ட ஒருவிதமான பாகுபாடுமின்றி மன்னர்கள் பாடுபாட்டு வந்தனர். அதில் சோழநாட்டில் திருவாரூர் என்ற ஊரில் மனுநீதிச் சோழன் என்று ஒரு அரசர் ஆண்டுவந்தார். அவர் நியாயம் செய்வதில் வல்லவர், மிகுந்த ஒழுக்க சீலர், சிவபக்தர், குடிமக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு ஒரு மகன், அவனும் சிறந்த சிவபக்தன், தினமும் சிவன் கோயிலுக்குப் போவான். ஒருநாள் வழக்கம் போல சிவன் கோயிலுக்குத் தன் தேரில் போய்க்கொண்டிருந்தான். அப்போது ஒரு பசுங்கன்று எதிர்ப்பாராத விதாமாகத் துள்ளிக் குதித்துக்கொண்டு தேரின் நடுவே பாய்ந்தது, பாவம், தேர்க்காலில் அகப்பட்டு உடனே இறந்தது. ராஜகுமாரன் உடனே தேரை நிறுத்தினான். அவன் உள்ளம் பதைபதைதது, உள்ளமும் உடலும் நடுங்க ஆரம்பித்தன, "ஒ! நான் என்ன் தப்பு செய்தேன், கன்றைக் கொன்ற பழி வந்து சேர்ந்துவிட்டதே, அந்தத் தாய்ப் பசுவிற்கு என்ன சொலவது?" தாய்ப்பசு அம்மா, மா என்று அலறிக்கொண்டு கதறி அழுதது. நேராக அரண்மனை வாயிலில் தொங்கிய ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் முட்டி அடித்தது. டண் டண்" என்ற மணி சத்தம் ஊர் முழுவதும் கேட்டது. மன்னர் உடனே வெள்யே வந்தார். பசு கண்ணீர் பெருக நிற்பதைப் பார்த்துப் பதறிப் போனார். தன் மந்திரிகளை என்ன நட்ந்தது என்று விசாரிக்க அனுப்பினார், அவர்களும் நடந்ததைச் சொன்னார்கள், "மன்னரே, தங்கள் மகன் இந்தப் பசுவின் கன்றைத் தேர்க்கால் கீழ் வந்ததைப் பார்க்காமல்........." மேலே முடிக்காமல் இழுத்தனர். அரசர், "ஐயோ! நான் என்ன செய்வேன்? இந்தப் பாவம் மிகக் கொடியது ஆயிற்றே! புத்ரசோகம் அனுபவிப்பது மிகக் கொடுமையான ஒன்று" என்று கூறி மனம் கலங்கினான். மந்திரிகள், "மன்னரே சாஸ்திரம் கூறுகிறது பிராயச்சித்தம் செய்தால் பாவம் போய்விடும் என்று, அதை உங்கள் குமாரனுக்குச் செய்விக்க வேண்டும். "மந்திரிகளே, என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? நீங்கள் சொல்லும் பிராயசித்தத்தால் பசுவின் துக்கம் போய்விடுமா? தன் குழந்தையை இழந்து தவிக்கிறது தெரியவில்லையா?" சிறிது யோசித்தார் மன்னர். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார், "இந்தப்பசு தவிப்பது போல் நானும் தவிக்க வேண்டும். அதாவது நானும் என் மகனை இழக்க வேண்டும், இதுதான் நீதி" மன்னர் சிவபெருமானைத் தியானித்தார். மந்திரிகள் அப்படியே ஸ்தம்பித்து சிலையைப் போல் நின்றனர், மன்னர் தன் மகனை உடனே அழைத்தார். அவனும் வந்து தந்தையை வண்ங்கினான். அவன் முக வாட்டத்துடன் இருந்தான். மன்னர் சொன்னார், "அருமை மகனே, அந்தப் பசு தவிபது போல் நான் தவிக்க வேண்டும். அதற்கு நீ உயிரிழக்க வேண்டும்" "நியாமான தண்டனை தந்தையே, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" அரசர் மந்திரியக் கூப்பிட்டு, "இவனைக்கொண்டு தேர்க்க்காலில் கீழே கிடத்துங்கள், பின் அவன் மேல் தேரை ஓட்டுங்கள், இது என் கட்டளை" மந்திரி இது செய்யமுடியாமல் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். "ஒருவரும் இது செய்ய முன்வரவில்லையா? பரவாயில்லை, நீதி காப்பது என் கடமை. நானே தேரை ஓட்டி என் கடமையைச் செய்கிறேன்" தேர் மேல அமர்ந்தார். தேரை ஓட்ட ஆரம்பித்தார். அப்போது சிவ பெருமான் அரசனுக்குக் காட்சி தந்தார். அரசே, உன் நீதியை மெச்சினேன், மிகவும் மகிழ்கிறேன் உன்னுடைய நீதியின் பெருமை உலகத்துக்குத் தெரிவிக்கவே இந்தச் சம்பவம் நடந்தது. நீ மிகப் புனிதன் ஆகிவிட்டாய்". சிவபெருமான் மறைந்த உடனேயே கன்றும், மந்திரியும், அரச குமாரனும் உயிர் பெற்று எழுந்தனர், தேவர்கள் பூமாரி பொழிந்தனர். எல்லோரும் ஆனந்தம் அடைந்தனர். அரசன் சிவனின் அருளை எண்ணி எண்ணி மனம் உறுகித் துதித்தான். தன் மகனையும் தழுவிக்கொண்டான். கன்றும் துள்ளிக்குதித்துத் தாய்ப்பசுவிடம் சென்று பல குடித்தது. எல்லா வருடமும் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு திருவிழாவே நடக்கிறது.

No comments:

Post a Comment