Wednesday, September 5, 2012

ஆடி வெள்ளிக்கு தவிட்டு அப்பம்

ஆதித்தமிழர்கள் ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். தரமான தவிடை வெல்லத்துடன் சேர்த்துக்குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்ய வேண்டும். இதை சப்பாத்தியைவிட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க வேண்டும். தற்காலத்தில் `நான்ஸ்டிக்' தோசைக்கல் உள்ளதால் அதிலும் சுட்டெடுக்கலாம். இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வட்டமாக உட்கார்ந்து வெறும் வயிற்றில் ஆடி வெள்ளியன்று அதிகாலையில் சாப்பிட வேண்டும். கேரளாவில் சில இடங்களில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை `கனகப்பொடி' என்கின்றனர். தவிடு நார்ச்சத்துடையது. இதில் வைட்டமின்-பி உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்துக்களை உடலில் சேர்த்துக்கொள்வது நல்லது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், குடும்ப ஒற்றுமை கருதியும் இதைச்சாப்பிடுவார்கள்

No comments:

Post a Comment