Wednesday, September 5, 2012

துர்கை

<பராசக்திக்கு, மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், மகிஷாசுரமர்த்தினி என்றும், துர்கமாசுரனை அழித்ததால் துர்கா என்றும் பெயர் ஏற்பட்டது. துக்கம், பயம், தரித்திரம்- இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றுபவள் துர்கை. மந்திர சாஸ்திரங்கள் துர்கையை, சர்வதேவதா ஸ்வரூபிணி என்றும், சர்வ மந்திர, யந்திர ஸ்வரூபிணி என்றும் போற்றுகின்றன. துர்கைக்கு ஒன்பது ரூபங்களும், பெயர்களும் உண்டு. அவை:- சூலினி துர்கை, வனதுர்கை, சாந்தி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, தீப துர்கை, சாபரீ துர்கை, ஆசூரீ துர்கை, லவண துர்கை ராகுவிற்கு, அதிதேவதை துர்கை என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment