Monday, September 3, 2012

பசுவைக் காப்பது பரம புண்ணியம்.எச்சரிக்கிறார் காஞ்சிப்பெரியவர்

பசுவைக் காப்பது பரம புண்ணியம். இதைச் சொல்லும் கையோடேயே அதைப் புறக்கணிப்பது மகாபாபம் என்பதற்கும் ஆதாரம் இருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சூரிய வசம்சத்தில் பிறந்த ராஜா திலீபன் வாழ்க்கையில் இரண்டுக்கும் சான்று இருக்கிறது. அவர் தேவலோகம் சென்றிருந்த போது காமதேனுவை பிரதட்சிணம் செய்யாமல் வந்து விடுகிறார். அந்த தப்புக்காக சந்ததி வாய்க்காது என்ற சாபம் ஏற்படுகிறது. சாபநிவர்த்தி ஒன்று உண்டே! அது என்ன? காமதேனுவின் கன்றான நந்தினி சூரியவம்சத்தின் குலகுரு வசிஷ்டரிடம் இருக்கிறது. வசிஷ்டர் சொன்னதின் பேரில் ஒரு மாட்டுக்காரன் செய்வதை விட பக்தியுடன் திலீபன் மேய்த்துக் கட்டி குளிப்பாட்டி விட்டு இன்னும் எல்லாக் கைங்கர்யங்களும் செய்கிறார். அவருடைய பத்னி ஸுதக்ஷிணையுடன் சேர்ந்து அப்படிப் பண்ணுகிறார். சாபம் நிவர்த்தியாகிறது. இதனால், ஏதோ ஒரு சாமான்யப் பிள்ளை பிறந்தது என்றில்லாமல் சூரிய வம்சத்திற்கு ரகுவம்சம் என்றே இன்னொரு பெயர் ஏற்படும்படியான பெருமை நிறைந்த ரகு என்பவன், திலீபனுக்குப் புத்திரனாகப் பிறந்தான். அப்புறம் பகவானே ரகுராமனாக அவதாரம் செய்ய, அந்தக் குலம் அடிப்படையானது.

No comments:

Post a Comment