Wednesday, September 5, 2012

ஆடியில் திருமணம் நடக்காதது ஏன்?

ஆடியில் தெய்வங்களுக்கு திருமணம் நடக்கும். ராமேஸ்வரத்தில் சுவாமி- அம்பாள் திருமணம் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படும். இந்த மாதம் தெய்வப்பணியில் மக்கள் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக ஆடியிலும், மார்கழியிலும் திருமணம் செய்ய தடை விதித்தனர். அறிவியல் ரீதியாக இந்த மாதங்களில் மனிதனை நோய்கள் தாக்கும். ஆடி காற்றால் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்படும். இது ஆண்களைக் கடுமையாகத் தாக்கும். பெண்களைப் பொறுத்தவரை ஆடியில் கர்ப்பமாகும் பெண் சித்திரையில் குழந்தை பெறுவாள். அப்போது கடும் கோடை. அந்த வெப்பத்துடன் தனக்குத் தரப்படும் வெப்பமான பிரசவ மருந்துகளையும் சாப்பிடுவது உடலை மிகவும் வருத்தும். குழந்தை பிறக்கும் போது தாய்க்கு மிகவும் உடல் வலி அதிகமாகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் தான் ஆடியில் திருமணம் நடத்துவதில்லை.

No comments:

Post a Comment