Wednesday, September 5, 2012

ஆதித்ய ஸ்ருதயம் தரும் பலன்கள்......

ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி. இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார். ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார். விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார். ராமரை நோக்கி விபீஷணன், `ஐயனே! அன்னையை அனவரதமும் (காம வசத்தால்) நினைத்துக் கொண்டே இருக்கிறான் ராவணன். உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது. ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான்'' என்று ராவணனின் உயிர் ரகசியத்தைக் கூறினார். உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார். அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது. அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர். ஆக முப்பத்தியொரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார். ஆதித்ய ஸ்ருதயம் தரும் பலன்கள்...... இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க வகுத்தது. ஆதித்ய ஹ்ருதயம், எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment