Tuesday, September 4, 2012

பவுர்ணமி தீப தானம்

பவுர்ணமி தீப தானம் ஒவ்வொரு பவுர்ணமியும் கொடுக்க வேண்டியதொரு தானம் ஆகும். ஒரு வருடம் வரும் எல்லா பவுர்ணமி அன்றும் இந்த தானத்தை கொடுக்க வேண்டும். அதாவது உத்தான துவாதசி ஆனவுடன் வரும் பவுர்ணமி அன்று ஆரம்பித்து இன்னொரு உத்தான துவாதசி ஆனவுடன் வரும் பவுர்ணமி அன்று கொடுத்து முடிக்க வேண்டும். எல்லா பவுர்ணமிகளிலும் கொடுக்கும் விளக்கு ஒரே ரகமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு வெண்கலம் ஒருவருக்கு பித்தளை அல்லது தாமிரம் என்று மாற்றி மாற்றி தானம் கொடுப்பது கூடாது. ஏனென்றால் இந்த தானம் தொடர்ச்சியாக 12 என்ற எண்ணிக்கையில் கொடுக்கும் தொடர் தானமாக இருக்க வேண்டும். எனவே விளக்கின் ரகங்களை மாற்றி கொடுப்பது சரியல்ல. கார்த்திகை பவுர்ணமி அன்று ஆரம்பித்து ஆஸ்வீஜ மாத பவுர்ணமி வரை கொடுப்பதை தொடர் தானமாக பாவித்து இன்னொரு கார்த்திகை மாத பவுர்ணமி அன்று கொடுப்பதை தொடர் தானத்தின் நிறைவான பாவனையில் முடிப்பதினால் அந்த பவுர்ணமி அன்று கொடுப்பதை மட்டும் மாறுபட்ட வகையில் கொடுக்கலாம். குத்துவிளக்கு மற்றும் காமாட்சி விளக்கு போன்றவற்றை தானமாக கொடுக்கும் பொழுது ஜோடியாகத்தான் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் தொடர்ச்சியாக கொடுக்க முடியாவிட்டால், உத்தான துவாதசி ஆனவுடன் வரும் பவுர்ணமி அன்று ஆரம்பித்து விட்டு இரண்டு அல்லது 3 பவுர்ணமி சேர்த்து ஒரு பவுர்ணமி அன்று தானம் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment