Wednesday, September 5, 2012

தெய்வங்கள் மீது கொண்ட அளவு கடந்த பக்தி கொண்ட

முருகப்பெருமான் உள்பட சில தெய்வங்கள் மீது அளவு கடந்த பக்தி கொண்ட சிலர், கன்னத்திலும், நாக்கிலும் அலகு குத்திக் கொண்டும், உடலில் வேல் பாய்ச்சிக் கொண்டும், கடுமையான வழிபாட்டு முறைகளை மேற்கொள்கிறார்கள். கடவுள், நமக்குள்ளேயே ஆத்ம ரூபமாக இருப்பதாக நம் சமயம் கூறுவதால், இப்படியெல்லாம் வருத்திக் கொள்வதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. ஆனாலும் தன் உடலை ஒரு பொருட்டாக நினையாமல் தங்களையே பகவானுக்கு சமர்ப்பிக்கும் அடிப்படையில் சிலர் இக்கடும் விரதங்களை மேற்கொள்ளும் போது, அது அவர்களுடைய தீவிர பக்தியைத் தான் காட்டுகிறது. சுற்றிலும் தீயை வளர்த்துக் கொண்டு அன்ன ஆகாரம் ஏதும் இல்லாமல் பல வருடங்கள் கடும் தவமிருந்து கடவுளைக்கண்ட முனைவர்களைப்பற்றி நாம் கேள்விப்படவில்லையா? பரம் பொருளின் அருளைப் பெற சாதாரண மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைத் தான் சாஸ்திரம் கூறும். அசாதாரண முறைகளைப் பின்பற்றுவோரும் உண்டு. ஆக எந்த வழிமுறைகளை வழிபாட்டில் கடைபிடித்தாலும் மேலோங்கி நிற்பது பக்தி தான்

No comments:

Post a Comment