Monday, September 3, 2012

எத்தகைய அன்பு, பண்பு

தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் 1847 முதல் 1903 வரை வாழ்ந்த புகழ்பெற்ற பாடகர். இவர் கதாகாலட்சேபமும் நிகழ்த்துவார். ஒருமுறை நந்தனார் சரித்திரத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் சீடரான வேதநாயகம் பிள்ளை இவரது காலட்சேபம் கேட்க வந்திருந்தார். தன் குருநாதர் எழுதிய கதையை, கிருஷ்ண பாகவதர் உருக்கமாகச் சொல்வது கேட்டு அகம் மகிழ்ந்தார். தன்னை விட, தன் குருநாதர் இதைக் கேட்டால் இன்னமும் மகிழ்ச்சியடைவாரே என்ற எண்ணம் பிள்ளைக்கு ஏற்பட்டது. ஒருமுறை, கோபால கிருஷ்ண பாரதியாரை, சீடர் வேதநாயகம் பிள்ளை காலட்சேபத்துக்கு அழைத்துச் சென்றார். குருவை பின்னால் இருக்கச் செய்து விட்டு, இவர் பாகவதர் முன்னால் போய் அமர்ந்தார். நந்தனார் சரிதத்தை பாகவதர் மிக உருக்கமாகச் சொன்னார். மக்கள் கூட்டம் மட்டுமல்ல! அதை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியாரும் ரொம்பவே உருகிப்போனார். கதை முடிந்ததும், பாரதியாரை அழைத்துச் சென்ற பிள்ளை, ""பாகவதரே! இவர்யாரென அறிவீர்களா?'' என்றார். ""தெரியவில்லையே!'' என்ற பாகவதரிடம், ""இவர் தான் நீங்கள் இவ்வளவு நேரம் நிகழ்த்திய நந்தனார் சரிதத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார்...''என்றார். ""ஆகா...தங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, தங்களை நேரில் வணங்கும் பாக்கியம் கிடைக்காமல் இருந்தேன், இன்று அக்குறை தீர்ந்தது. தாங்கள் வந்தது தெரிந்தால் மேடையில் அமர வைத்திருப்பேன்,'' என்று நெகிழ்ந்து போனார் பாகவதர். ""பாகவதரே! நான் என்ன தான் கதையை எழுதினாலும், தாங்கள் அதை மனமுருக எடுத்துச்சொன்ன விதம் தான் என் எழுத்துக்கே உயிரூட்டியது,'' என்று உருகினார் பாரதியார். எத்தகைய அன்பு, பண்பு பார்த்தீர்களா! அதனால் தானே இவர்கள் இன்றளவும் நம்மால் நினைக்கப்படுகிறீர்களா!

No comments:

Post a Comment