Thursday, September 20, 2012

தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்கள்

அகங்காரம் - செருக்கு அக்கிரமம் - முறைகேடு அசலம் - உறுப்பு அசூயை - பொறாமை அதிபர் - தலைவர் அதிருப்தி - மனக்குறை அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது அத்தியாவசியம் --இன்றியமையாதது அநாவசியம் -வேண்டாதது அநேகம் - பல அந்தரங்கம்- மறைபொருள் அபகரி -பறி, கைப்பற்று அபாயம் -இடர் அபிப்ராயம் -கருத்து அபிஷேகம் -திருமுழுக்கு அபூர்வம் -புதுமை அமிசம் -கூறுபாடு அயோக்கியன் -நேர்மையற்றவன் அர்த்தநாரி -உமைபாகன் அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த அர்த்தம் -பொருள் அர்த்த ஜாமம் - நள்ளிரவு அர்ப்பணம் -படையல் அலங்காரம் -ஒப்பனை அலட்சியம் - புறக்கணிப்பு அவசரமாக - உடனடியாக, விரைவாக அவஸ்தை - நிலை, தொல்லை அற்பமான - கீழான, சிறிய அற்புதம் - புதுமை அனுபவம் - பட்டறிவு அனுமதி - இசைவு ஆ ஆச்சரியம் - வியப்பு ஆக்ஞை - ஆணை, கட்டளை ஆட்சேபணை - தடை, மறுப்பு ஆதி - முதல் ஆபத்து - இடர் ஆமோதித்தல் - வழிமொழிதல் ஆயுதம் - கருவி ஆரம்பம் -தொடக்கம் ஆராதனை -வழிபாடு ஆரோக்கியம் - உடல்நலம் ஆலோசனை - அறிவுரை ஆனந்தம் - மகிழ்ச்சி இ இஷ்டம் - விருப்பம் இங்கிதம் - இனிமை ஈ ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை உ உக்கிரமான - கடுமையான உபசாரம் - முகமன் கூறல் உபயோகம் - பயன் உதாசீனம் - பொருட்படுத்தாமை உத்தரவாதம் - பிணை, பொறுப்பு உத்தரவு - கட்டளை உல்லாசம் - களிப்பு உற்சாகம் - ஊக்கம் ஐ ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை க கர்ப்பக்கிருகம் - கருவறை கர்மம் - செயல் கலாச்சாரம் - பண்பாடு கலாரசனை - கலைச்சுவை கல்யாணம் - மணவினை, திருமணம் கஷ்டம் - தொல்லை, துன்பம் கீதம் - பாட்டு, இசை கீர்த்தி - புகழ் கீர்த்தனை- பாமாலை, பாடல் கோஷம் - ஒலி ச சகலம் - எல்லாம், அனைத்தும் சகஜம் - வழக்கம் சகி - தோழி சகோதரி - உடன் பிறந்தவள் சங்கடம் - இக்கட்டு, தொல்லை சங்கதி - செய்தி சங்கோஜம் - கூச்சம் சதம் - நூறு சதா - எப்பொழுதும் சதி- சூழ்ச்சி சத்தம் - ஓசை, ஒலி சந்தானம் - மகப்பேறு சந்தேகம் - ஐயம் சந்தோஷம் - மகிழ்ச்சி சபதம் - சூளுரை சம்சாரம் - குடும்பம், மனைவி சம்பந்தம் - தொடர்பு சம்பவம் - நிகழ்ச்சி சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு சம்பிரதாயம் - மரபு சம்மதி - ஒப்புக்கொள் சரணாகதி - அடைக்கலம் சரித்திரம் - வரலாறு சரீரம் - உடல் சருமம் -தோல் சர்வம் - எல்லாம் சாதாரணம் - எளிமை, பொதுமை சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல் சாதம் - சோறு சாந்தம் - அமைதி சாகசம் - துணிவு, பாசாங்கு சாராமிசம் - பொருட்சுருக்கம் சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது சாவகாசம் - விரைவின்மை சாஸ்திரம் - நூல் சாசுவதம் - நிலை சிகிச்சை - மருத்துவம் சித்தாந்தம் - கொள்கை, முடிவு சித்திரம் - ஓவியம் சிநேகிதம் - நட்பு சிம்மாசனம் - அரியணை சிரத்தை - அக்கறை, கருத்துடைமை சிரமம் - தொல்லை சின்னம் - அடையாளம் சீக்கிரமாக - விரைவாக சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை சுத்தமான - தூய்மையான சுபாவம் - இயல்பு சுலபம் - எளிது சுவாரஸ்யமான - சுவையான சேவை - பணி சேனாதிபதி - படைத்தலைவன் சௌகர்யம் - வசதி, நுகர்நலம் சௌக்கியம் - நலம் ] த தசம் - பத்து தத்துவம் - உண்மை தம்பதியர் - கணவன் மனைவி, இணையர் தரிசனம் - காட்சி தர்க்கம் - வழக்கு தர்க்க வாதம் - வழக்காடல் தாபம் - வேட்கை திகில் - அதிர்ச்சி திருப்தி - நிறைவு தினசரி - நாள்தோறும் தினம் - நாள் தீர்க்கதரிசி _ ஆவதறிவார் துரதிருஷ்டம் - பேறின்மை துரிதம் - விரைவு துரோகம் - வஞ்சனை துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல் தேகம் - உடல் தேசம் - நாடு தைரியம் - துணிவு ந நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன் நமஸ்காரம் - வணக்கம் நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து நவீனம் - புதுமை நவீன பாணி - புது முறை நாசம் - அழிவு, வீண் நாசூக்கு - நயம் நாயகன் - தலைவன் நாயகி - தலைவி நிஜம் - உண்மை, உள்ளது நிசபதமான - ஒலியற்ற, அமைதியான நிச்சயம் - உறுதி நிச்சயதார்த்தம் - மண உறுதி நிதானம் - பதறாமை நித்திய பூஜை - நாள் வழிபாடு நிரூபி - மெய்ப்பி, நிறுவு நிருவாகம் - மேலாண்மை நிதி - பொருள்,செல்வம், பணம் நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை ப பகிரங்கம் - வெளிப்படை பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து பரவசம் - மெய்மறத்தல் பராக்கிரமம் - வீரம் பராமரி - காப்பாற்று , பேணு பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு பரிசோதனை - ஆய்வு பரிட்சை - தேர்வு பலவந்தமாக - வற்புறுத்தி பலவீனம் - மெலிவு, வலிமையின்மை பலாத்காரம் - வன்முறை பாணம் - அம்பு பாதம் - அடி பாரம் - சுமை பால்யம் - இளமை பிம்பம் - நிழலுரு பிரகாசம் - ஒளி, பேரொளி பிரகாரம் - சுற்று (அதன்)பிரகாரம் - (அதன்)படி பிரசங்கம் - சொற்பொழிவு பிரசுரம் - வெளியீடு பிரச்சினை - சிக்கல் பிரதிநிதி - சார்பாளர் பிரதிபலித்தல் - எதிரியக்கம் பிரதிபிம்பன் - எதிருரு பிரத்தியோகம் - தனி பிரபலம் - புகழ் பிரமாதமான - பெரிய பிரமிப்பு - திகைப்பு பிரயோகி - கையாளு பிரயோசனம் - பயன் பிரவாகம் - பெருக்கு பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல் பிரார்த்தனை - தொழுகை, பிரியம் - விருப்பம் பிரேமை - அன்பு பீடிகை - முன்னுரை புண்ணியம் - நல்வினை புத்தி - அறிவு புத்திரன் - புதல்வன் புனிதமான - தூய புஷ்பம் - மலர், பூ புஜபலம் - தோள்வன்மை பூஜை - வழிபாடு பூர்த்தி - நிறைவு பூஷணம் - அணிகலம்- போதனை - கற்பித்தல் ம மகான் - பெரியவர் மகாயுத்தம் -பெரும்போர் மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர் மத்தியானம் - நண்பகல் மந்திரி - அமைச்சர் மனசு - உள்ளம் மனிதாபிமானம் - மக்கட்பற்று மானசீகம் - கற்பனை மல்யுத்தம் - மற்போர் ய யந்திரம் - பொறி யூகம் - உய்த்துணர்தல் யூகி - உய்த்துணர் யோக்யதை - தகுதி ர ரதம் - தேர் ரத சாரதி- தேரோட்டி ராணி - அரசி ராத்திரி - இரவு ராச்சியம் - நாடு,மாநிலம் ராஜா - மன்னன் ரசம் - சாறு, சுவை ல லட்சம் - நூறாயிரம் லட்சணம் - அழகு லட்சியம் - குறிக்கோள் வ வதம் - அழித்தல் வதனம் - முகம் வம்சம் - கால்வழி வஸ்திரம் - துணி, ஆடை வாஞ்சை - பற்று வாயு - காற்று விக்கிரகம் - வழிபாட்டுருவம் விசாரம் - கவலை விசாலமான - அகன்ற விசித்திரம் - வேடிக்கை விஷேசம் - சிறப்பு விஞ்ஞானம் - அறிவியல் விஷயம் - செய்தி விதானம் - மேற்கட்டி விநாடி - நொடி வித்தியாசம் - வேறுபாடு விபூதி - திருநீறு , பெருமை விமோசனம் - விடுபடுதல் வியாதி - நோய் விரதம் - நோன்பு விவாகம் - திருமணம் விவாதி -வழக்காடு வேகம் - விரைவு வேதம் - மறை வேதவிற்பனன்ர் - மறைவல்லார் வேதியர் - மறையவர் ஜ ஜனநாயகம் - குடியாட்சி ஜனம் - மக்கள் ஜனனம் - பிறப்பு ஜாதகம்- பிறப்புக் குறிப்பு ஜாலம் - வேடிக்கை ஜூரம் - காய்ச்சல் ஜோதி - ஒளி ஜோடி - இணை ஜோடித்தல் - அழகு செய்தல் ஸ ஸந்ததி - கால்வழி ஸமத்துவம் - ஒரு நிகர் ஸமரசம் - வேறுபாடின்மை ஸமீபம் - அண்மை ஸம்ஹாரம் - அழிவு ஸோபை - பொலிவு ஸௌந்தர்யம் - பேரழகு ஸ்தாபனம் _ நிறுவனம் ஸ்தானம் - இடம்

No comments:

Post a Comment