Wednesday, September 5, 2012

ஸ்வாமி:என்றால்

ஸ்வாமி: வடமொழியில் `ஸ்வம்' என்ற சொல்லுக்கு, உடமை, சொத்து என்று பொருள். `ஸ்வம்' என்பதே தெலுங்கில் `ஸொம்மு' என்று ஆகியிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்த இறைவனுக்கு இந்த உலகமே சொந்த உடமை என்பதால் இறைவனை `ஸ்வாமி' என்று குறிப்பிடுகிறோம். இந்த உலகத்தையே சொத்தாக உடையவர் என்பதால், வைணவர்கள், பெருமாளை `உடையவர்' என்று அழைக்கிறார்கள். ஞானத்தை நல்கும் குரு, கடவுளுக்குச் சமம் என்பதால், ஸ்ரீ ராமானுஜரையும் அவர்கள் `உடையவர்' என்றே குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment