Wednesday, September 5, 2012

பசுவின் பாத தூசி நம்மீது பட்டால், சர்வ தோஷமும் விலகும்

பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமம் - இவை சேர்ந்தது தான் பஞ்ச கவ்யம். இதில் சிறிதளவு எடுத்து மந்திர பூர்வமாக உட்கொள்ளும் போது சரீரசுத்தியோடு ஆத்ம சுத்தியும் ஏற்படுகிறது, தெய்வத்தன்மை கொண்ட பசுவை, கோமாதா என்று கொண்டாடுகிறோம், கேட்ட வரனை, கேட்ட மாத்திரத்தில் கொடுக்கும் காமதேனுவும், பசு ரூபந்தான். பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவியே வாசம் பண்ணுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே பசுவின் முகத்திற்கு அல்லாமல் அதன் பின்புறத்திற்குத் தான் பூஜை செய்யவேண்டும். பசு, தாயைப் போல, தன் ரத்தத்திலிருந்து சுரக்கும் பாலை, தன் கன்றுக்கு மட்டுமின்றி, எல்லா குழந்தைகளுக்கும் தருகிறது. ஆகவே பசுவுக்கு புல் போடுவது, வாழைப்பழம் கொடுப்பது மிகமிக புண்ணியம். கிராமங்களில் காலை நேரங்களில் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். பசுக்கள் நடக்கும் போது அதன் கால் குளம்புகளிலிருந்து தூசி பறக்கும். அதே போல மாலையில் அவைகளை திரும்ப தொழுவத்திற்கு ஓட்டிச் செல்வார்கள். அப்போதும் தூசி பறக்கும். இந்த பசுவின் பாத தூசி நம்மீது பட்டால், சர்வ தோஷமும் விலகும். இப்படி பசுக்களை ஓட்டிச் செல்லும் காலை, மாலை நேரங்களுக்கு `கோதூளி' லக்னம் என்பார்கள். இந்த நேரத்தில் எந்த நல்ல காரியத்தையும், நாள் திதி, நட்சத்திரம் பார்க்காமல் செய்யலாம். நன்மையே உண்டாகும் என சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment