Tuesday, September 4, 2012

சாந்திமுகூர்த்த தின தானம்

சாந்தி முகூர்த்தத்திற்கு உபயோகம் ஆகட்டும் என்று மணப் பெண்ணிற்கோ அல்லது மணமகனுக்கோ அவர்களுடைய திருமணத்திற்கு முன்பு தானம் கொடுப்பது கூடாது. அவர்களுக்கு கல்யாணம் ஆகி தம்பதியரான பிறகுதான் கொடுக்க வேண்டும். ஆகையால், நேரிடையாக மணமக்களுக்கே கொடுக்க வேண்டும் என்பவர்கள் அவர்கள் கல்யாணத்தன்றோ அல்லது சாந்தி முகூர்த்தத்தன்றோ கொடுக்கலாம். இந்த மாதிரியாக தானம் கொடுப்பவர்கள், மஞ்சள், குங்குமம் இத்யாதிகள் வைக்க ஐந்து கிண்ணங்களும், தட்டும், திரட்டுப்பால் வைக்க ஒரு கிண்ணம், வெற்றிலை, பாக்கு வைக்க ஒரு சிறிய தட்டு, பழங்களும் இனிப்புகளும் வைப்பதற்கு சற்று பெரிய தட்டுகளும், பால் வைப்பதற்கு சொம்பு அல்லது இரண்டு டம்ளர், ஆரத்தி எடுக்க ஒரு சிறிய தட்டு எல்லாம் கொடுப்பது நல்லது. இத்தகைய தானம் செய்வதால் கல்யாணம் செய்பவர்களுக்கு நல்லவிதமாக உதவி செய்த மாதிரியும் ஆகும். ஒரு சிலர் கல்யாணங்களுக்கு நிறைய பண உதவி செய்கிறார்கள். அத்தகைய உதவி செய்பவர்கள் இந்த மாதிரியான செலவை அவர்களே ஏற்று நல்ல முறையில் செய்விக்கலாம். அப்படி செய்தால் கிடைப்பதற்கு அரிய புண்ணியங்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment