Tuesday, September 4, 2012

தானம்

. சிரத்தை இல்லாமல் தானம் செய்வது வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக்கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக்கூடாது. 2. தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர்களாக இருக்க வேண்டும். கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமை யானதாகும். 3. பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன், நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர். 4. அநியாயமாக பிறரிடம் ஏமாற்றிப் பெற்ற பொருளில் ஒருபகுதியை தானம் செய்தால் பாவம் தொலையும் என்று எண்ணிச் செய்யும் தானம் பாவச் செயலாகும். தானம் செய்த பிறகு இப்படி பெரும் பணத்தை வீணாக பிறருக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்துவதும் பாவத்திலேயே அடங்கும். 5. தானம் பற்றிய இந்த அறிவுரைகளை மகாபாரதத்தில் அசுவமேதயாகம் செய்ய முற்படும் தர்மபுத்திரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். 6. சனிஸ்வரனை திருப்திபடுத்த தைலம் அதாவது நல்லெண்ணெய், தூய்மையான நீல கல், எள், உளுந்து பூமி இரும்பு ஆகியவற்றை தானம் அளிக்கலாம். 7. கருமை நிற ஆடு, கருமை நிற பசு, எருமை மாடு ஆகியவற்றையும் தானமாக கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 8. நம்மால் முடிந்தது நமது பொருளாதார சூழலுக்கு ஏற்றது என்று மட்டும் தானம் கொடுத்தால் போதுமானது. சக்திக்கு மீறி கொடுப்பது தானம் அல்ல ஆடம்பரம். 9. வறுமையில் இருப்பவர்கள் சனிக்கிழமை ஆஞ்சி நேயர் கோவிலுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் தானமாக கொடுப்பது மிக சிறந்தது. 10. ஆதிகாலத்தில் கன்னிகாதானம் உயர்வாக கருதப்பட்டது. தற்போதைய நவீன உலகில் ரத்ததானமும், உடல் உறுப்பு தானங்கலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன

No comments:

Post a Comment