Wednesday, September 5, 2012

காசி யாத்திரை

காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேசுவரம் செல்ல வேண்டும். அங்குள்ள அனைத்து புனித தீர்த்தங்களிலும் நீராடிய பின்னர் சேது கடற்கரையில் மண் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காசிக்குச் சென்று அங்கு பிரயாகை எனப்படும் திரிவேணி சங்கமத்தில் சேதுவிலிருந்து கொண்டு சென்ற மணலைக் கரைக்க வேண்டும். பின்னர் திரிவேணியில் நீராடி விட்டு, காசியில் உள்ள அனைத்துப் படித்துறைகளிலும் நீராடவேண்டும். பின்பு கயாவில் முன்னோருக்கு பிண்டதர்ப்பணங்கள் தரவேண்டும். அதன் பின்னர் கங்கா தீர்த்தம் எடுத்துக்கொண்டு வந்து, அந்த நீரை ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதுவே காசி யாத்திரையின் நிறைவான அம்சம் ஆகும்.

No comments:

Post a Comment