Wednesday, September 5, 2012

கிரிவலம் வரும்போது கடைபிடிக்க வேண்டியவை..

. அமாவாசை அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டு அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம். 2. பவுர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத்தரும். 3. கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது. 4. கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களை தடுக்கும் சக்தி கொண்டது. 5. முக்கியமாக அமாவாசை-பவுர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாக செல்ல வேண்டாம்.மேலும் திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். 6. கிரிவலத்தின் போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம். 7. கிரிவலம் வரும்பாது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும். 8. கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் மூழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம். 9. பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக்கொண்டு கிரிவலம் வந்தால் `பிறவியில்லா பெருவாழ்வு' என்ற பேரானந்த நிலை கிடைக்கப்பெறலாம்.

No comments:

Post a Comment