Wednesday, September 5, 2012

அங்காள பரமேசுவரியின் அவதாரம்

. ஆலயத்துக்குள் செல்லும் முன்பாக கை, கால்கள் நீரால் கழுவப்பட வேண்டும். நடையையும், உடையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். 2. அமாவாசை தினத்தன்று மஞ்சள், காவி, சந்தன கலர், பொன்னிறம் போன்ற அம்மனுக்கு ஏற்புடைய உடையை அணிந்து கொண்டு வழிபாட்டுக்குச் செல்வது சிறப்பாகும். 3. தேவையான பூஜைப் பொருட்களை பெற்று கையில் ஏந்திய உடன் மனதை எந்த சலனத்துக்கும் இடம் தராமல் ஒருநிலைப்படுத்தி அம்மன் தியான சுலோகங்கள் மனதில் பதியுமாறு கூறிச் செல்லலாம். இதனால் அம்மன் அருள் நிறைந்து மனம் தூய்மை பெறுகிறது. 4. அம்மனின் பெயரைக்கூறி உயிர் பலியிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 5. உயிர் பலியிட்டு அதன் இறைச்சியை கோவிலிலும், வளாகத்திலும் வைத்து சாப்பிடும் வழக்கத்தை அறவே முற்றிலும் தவிர்க்க வேண்டும். 6. ஆலயத்திற்குள் மது அருந்துவது, போதை மருந்து உட்கொள்வது, புகைப்பிடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற வற்றை செய்தார்களேயானால் அவர்களை பாவம் தான் பற்றிக்கொள்ளும். 7. அம்மனுக்கு என்றே படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சுண்டல், பொரிக்கடலை, பஞ்சாமிர்தம் போன்றவற்றை அன்னதானமாக மற்ற பக்தர்களுக்கு வினியோகித்தால் புண்ணியம் கிடைக்கும். 8. அம்மன் தியான சுலோகங்களை குறைந்தது 108 முறையாகிலும் மனதுக்குள் உச்சரிக்கப்பட வேண்டும். அம்மன் 108 நாமாவளி சரணம் போன்ற பாடல்களை உச்சரித்தால் அம்மன் நினைவால் அம்மன் பரிபூரண அருள் கண்டிப்பாக கிடைக்கும். 9. கோவிலில் வந்து படுப்பது, தூங்குவது, சீட்டாடுவது, சினிமா கதைகளை பேசுவது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 10. வாரத்திற்கு ஒருநாள் கோவிலுக்குச் சென்று புல் பூண்டு அகற்றுதல், ஒட்டடை அடித்தல், குப்பை பெருக்குதல், வெள்ளையடித்தல் போன்ற ஆலயப்பணிகளில் ஈடுபாடு கொண்டால் அம்மன் அருள் தானாக வந்து சேரும். அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் குறைந்தது மூன்று பேர்களுக்காவது மூன்று விதமான தருமங்கள் செய்வது நல்லது. முதல் தானம் சொர்ணதானமாகும். இது ஏழை எளியவருக்கு தன்னால் இயன்ற காசு பணத்தை தானமாக, தருமமாக கொடுப்பதாகும். அன்னதானம் என்பது உணவு வகைகள், சாப்பாடு, டிபன் பலகார பட்சணங்கள் ஆகியவற்றை ஏழை எளியவருக்கும் பசியால் வாடுபவருக்கும் கொடுத்து பசியாற்றுவது. இது சிறந்த தானமாக கருதப்படுகிறது. வஸ்திர தானம் என்பது புது துணிவகைகள், புடவை ஜாக்கெட் பிட், வேட்டி, துண்டு, சர்ட் பிட் ஆகியவை. ஏழை எளியோருக்கு உடுத்திக் கொள்ளும் வகையில் அன்பு நெறியில் வழங்கலாம். இந்த மூன்று தானங்கள் செய்வதால் மூன்று ஆற்றல் மிகு சக்திகளும் கிடைக்கும். அங்காள பரமேசுவரியின் அவதாரம் உலக இயக்கத்திற்காகப் படைப்புத் தொழிலை ஏற்று நின்ற பிரம்மா தனக்குப் படைப்புத் தொழிலுக்கு உதவி செய்வதற்காக 10 பிரஜாபதிகளைப் படைத்தார். அப்பிரஜாபதிகளில் அதிமுக்கியமான பிரஜாபதியே தக்கன் என்ற பிரஜாபதியாவார். தக்கன் கோடான கோடி உயிரினங்கள் தோன்றுதலுக்கும், அனைத்துப் படைப்புகளுக்கும் காரண கர்த்தாவாக விளங்கி நின்றான். உலக சுழற்சிக்காக எண்ணற்ற ரிஷிகளையும், முனிவர்களையும் படைத்தார். அத்துடன் 60 பெண்களைப் படைத்து 27 பெண்களைத் தேவலோகத்தில் தேவர்களுக்கு கொடுத்தும் தேவர் வம்சம் விளங்கிட உதவினான். இவர்கள் மூலமே சப்த நட்சத்திரங்களில் அதிமுக்கியமான ஆதிபராசக்தியின் அம்சமான தாட்சாயணி தோன்றினாள். தாட்சாயணியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் தக்கன் சிவனாரின் மாமனார் என்ற மமதையும், செருக்கும், ஆவணமும், அகங்காரமும் கொண்டான். அத்துடன் அனைத்தையும் தானே படைப்பதாக நினைத்து எல்லாம் வல்ல படைப்பாற்றல் தனக்கே உள்ளது என்று நினைத்தான். ஒருநாள் அவன் சிவபெருமான் வீற்றிடமான கைலாயத்திற்குத் தன்னிச்சையாகச் செல்கையில் சிவனாரின் மெய்க்காப்பாளராகிய நந்தித் தேவர் தடுத்து நிறுத்தினார். அதனால், அவமானம், தலைகுனிவு ஏற்பட்டு அனைத்துப் பேராற்றலையும் பெறத்தக்க விதத்தில் மகா யாகத்தைச் செய்ய தீர்மானித்தான். சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பின்றி மற்ற அனைவரையும் அழைத்து யாகத்தைத் தொடங்கினான். இதனால் தாட்சாயணி ஆவேசமாகி ஒன்று திரண்டு சக்தியின் வடிவமாக மாறினாள். தக்கன் செய்யும் யாகம் அழிய சாபமிட்டாள். அத்துடன் தாட்சாயணி தன் பூத உடலைத் தக்கன் யாக வேள்வித் தீயில் விழுந்து கருகி அழித்தாள். இதனால் தாட்சாயணி தன் உடலை அழித்து உருவமற்ற அங்காளி ஆக மாறினாள். ஆனால் உருவமாக பார்வதி என்றும் ஆகி நின்றார். இந்த செய்தியை அறிந்த சிவபெருமான் கடும் துயரம் கொண்டார். அந்த கோப சீற்றத்தில் தக்கன் யாகச் சாலையை அடைந்து தாட்சாயணி தேவியின் தீயில் கருகிய பூத உடலை யாகக் குண்டத்தில் இருந்து எடுத்துத் தன் தோள்மீது சுமந்த வண்ணமாக அகோர நர்த்தன தாண்டவம் ஆடினார். இதனால் தாட்சாயணி தேவியின் உடல் உறுப்பு பாகங்கள் ஆடை அணிகலன்கள், மற்றும் துணி மணி வகைகள் அனைத்தும் உலகம் எங்கும் உதிர்த்து விழுந்தன. இப்படி தாட்சாயணி உடல் உறுப்புகள் சிதறி, சிதறுண்ட, பாகங்கள், உடல் உறுப்பு பாகங்கள், ஆடை அணிகலன்கள் துணி மணிகள் விழுந்த இடங்களே இன்று அங்காள பரமேசுவரியின் சக்தி பீடங்களாகத் தோன்றிக் காட்சி அளிக்கின்றன. சக்தி பீடங்கள் எண்ணிக்கை பரவலாக, பலவாறாக 6400 என்றும், 1008 என்றும், 108 என்றும் 64 என்றும், 51 என்றும் பல வகையாக வகைபடுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment