Wednesday, September 5, 2012

பித்தா' என்று அழைத்தது ஏன்?

கயிலை நாதனை, சுந்திரமூர்த்தி நாயனார், `பித்தா, பிறை சூடி' என்று அழைத்தார். ஈசனை, `பித்தா' என்று ஏன் அவர் அப்படி கூறவேண்டும்? இதற்கு மகாவித்வான், மீனாட்சி சுந்தரம்பிள்ளை தரும் விளக்கம்: நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் தவறி விழுந்து விட்டால், மூன்று முறை மேலே தூக்கி எடுத்துக் காட்டிய பிறகே, தண்ணீர் அவனை முற்றிலுமாக மூழ்கடிக்கும். அதனால் தான் `தண்ணீரும் மூன்று பிழை பொறுத்துக் கொள்ளும்' என்றொரு பழமொழி வந்தது. உமையவளோ, அளவற்ற பிழைகளைப் பொறுத்து, அடியவர்களுக்கு அருள் பாலிப்பவள், அப்படிப்பட்ட உமையவளை அல்லவா சிவன் தன் தலைமுடியில் வைத்திருக்கவேண்டும். வெறும் மூன்று பிழைகளை மட்டும் பொறுப்பவளான கங்கையை (நீர்) அல்லவா உயர்த்தி தன் முடியில் அணிந்துள்ளார். இந்த முறையற்ற செயல் காரணமாகத்தான், சிவனை `பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்டிருப்பாரோ? என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment