Wednesday, September 5, 2012

யோகம் தரும் மண்பானை பொங்கல்

தைத்திருநாளில் சூரியன் நாம் நவதானியங்கள் மூலம் நேரில் பார்க்கிறோம். அரிசி சந்திரனுக்குரியது. நவதானியங்களில் புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் நல்லது. அரிசியில் உடலின் அத்தியாவசிய சத்தான கார்போ ஹைட்ரேட் உள்ளது. இவற்றை சூரியன் மற்றும் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வழிபட்டு சாப்பிடும் போது சகல நலன்களும் கிடைக்கிறது. பொங்கலை நாம் நல்ல நேரத்தில் வைக்க வேண்டும். யோகம் தரும் மண்பானை பொங்கல்: சமீப காலமாக பொங்கலை பெரும் பாலானவர்கள் குக்கரில் வைத்து தயாரிக்கிறார்கள். அல்லது அலுமினியம், பித்தளை, வெண்கலப் பாத்திரங்களில் பொங்கல் வைக்கிறார்கள். இது நல்லதல்ல. மண்பானையில் வைக்கும் பொங்கல் தான் உட லுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். மண்பானையின் சிறப்பை சிவன் தனது அடியார் திருநீலகண்டர் மூலம் உணர்த்தியுள்ளார். குயவர்கள் பொங்கல்பானை தயார் செய்வதற்கு முன்பு கடவுளுக்கு பூஜை போடுவார்கள். இப்படி முறைப்படி பூஜை போட்டு தயார் செய்யப்படும் மண் பானை பொங்கல் வழிபாட்டுக்கு மிகவும் நல்லது. களிமண்ணில் இருந்து தயாராகும் இப்பானையில் பொங்கல் செய்தால் அதன் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. களி மண்ணில் உள்ள சில சத்துக்களும் நமக்கு கிடைக்கும். பொங்கல் பானை தயாரிக்கும் போது களிமண்ணை பிசைந்து முதலில் பூஜை போடுவோம். இந்த பானையை பயன்படுத்தும் குடும்பம் இறைவன் அருள் பெற்று செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று வேண்டுவோம். நாங்கள் சக்கரத்தில் வைத்து பானையை தயார் செய்யும் போது கூட அதை உருவாக்குவது இறைவன் தான். நாங்கள் அல்ல. எனவே மண்பானையில் பொங்கல் வைத்தால் நம் வீட்டில் சூரிய பகவான் நிச்சயம் பிரவேசிப்பார். சகல வரங்களை வாரி வழங்குவார் என்றார். யோகஸ்ரீ மணிபாரதி கூறும் போது, `பொங்கல் அன்று மற்ற பாத்திரங்களை விட மண் பானையில் பொங்கலிடுங்கள். நிச்ச யம் அதன் பலன் உங்களுக்கு உடனே கிடைப்பதை உணரு வீர்கள். மண் பானையை கேஸ் ஸ்டவ் அடுப்பில் வைத்தும் பொங்கல் செய்யலாம். புது மண்பானையில் பொங்கல் செய்யும் போது மனதில் உற்சாகம் பிறக்கும். மனரீதியான ஒரு எழுச்சி, உத்வேகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் புதுமண் பானை பொங்கல் புது சுவையையும், ஆனந்தத்தையும் அள்ளித் தரும். எனவே புது மண்பானையில் பொங்கல் செய்து சகல யோகங்களை பெற்று வாழ்வோம். மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பது தைப் பொங்கல் நாளின் மறு நாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபாடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று கால் நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டி விடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக் கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள், விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதே போல செய்வார்கள். தாம்பாளத் தட்டு களில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லா பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment