Monday, September 3, 2012

எந்தத் தகவலாக இருந்தாலும் அது உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள்

ஒருவர் ஒரு ஊருக்கு வந்து, ஒரு இளைஞனிடம் குறிப்பிட்ட தெரு எங்கிருக்கிறது என கேட்டார். இளைஞனுக்கு பாதை தெரியாது. ஆனாலும், உள்ளூர்க்காரனான தனக்கு இதுகூட தெரியவில்லை என தன்னிடம் கேட்டவர் நினைப்பாரே என்ற எண்ணத்தால், ""அதுவா! அதோ, இங்கிருந்து அரை கி.மீ, செல்லுங்கள், வந்துவிடும்,'' என ஏதோ ஒரு திசையைக் காட்டிவிட்டார். ஊருக்கு புதியவரும் அதை நம்பிச்செல்ல, அங்கே தான் செல்ல வேண்டிய தெரு இல்லாததும், அங்கிருந்த விபரமான ஒருவர், ""அடடா.. நீங்கள் பஸ்சை விட்டு ஒருவனிடம் விசாரித்ததாக சொல்கிறீர்களே! அதன் அருகில் தான் அந்தத்தெரு இருக்கிறது,'' என்றார். இதுபோல, தவறான தகவல் சொல்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமென உபநிஷதத்தில் சொல்லியுள்ளனர். பொய் சொல்பவனுக்கு போஜனம் மட்டும் தான் கிடைக்காது. ஆனால், தவறான தகவல் சொல்பவன் மரம்வேரோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதைப் போல சர்வநாசமாகி விடுவான் இந்த உலகத்தில் மட்டுமல்ல, மேலுலகம் சென்ற பிறகும் அவன் படும் பாடு சொல்லி மாளாது என்கிறது. இனிமேலாவது, எந்தத் தகவலாக இருந்தாலும் அது உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள். இல்லாதபட்சத்தில் விபரமறிந்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திய பிறகு, வந்தவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

No comments:

Post a Comment