Monday, September 3, 2012

இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள்- விவேகானந்தர்

விவேகானந்தரின் கம்பீரம் கண்டு மேலைநாட்டுப் பெண் ஒருத்தி அவர் மீது காதல் கொண்டாள். "உங்களைத் திருமணம்செய்ய நினைக்கிறேன்,'' என்றாள். ""ஏன் இந்த எண்ணம் உண்டானது?'' என்று வியப்புடன் கேட்டார் விவேகானந்தர். ""உங்களைப் போல அறிவாளி குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பது தான் என் எண்ணம்!'' என்று அவள் பதிலளித்தாள். விவேகானந்தர் அப்பெண்ணிடம், ""நம் இருவருக்கும் திருமணம் நடந்து அறிவாளி குழந்தையைப் பெற பலகாலம் காத்திருக்கவேண்டும். அவ்வளவு நாள் ஏன் ஆகவேண்டும். இப்போதே உன் ஆசை நிறைவேறட்டும்,'' என்றார். இதுகேட்டு அவள் விழித்தபோது,""தாயே! இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லி அவளது எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment